

திட்டக் குழுவுக்கு மாற்றான புதிய அமைப்பில் மாநில முதல்வர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய் துள்ளது. இந்திய கூட்டாட்சி முறையில், மாநிலங்கள் நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. மாநிலங்களுக்கு நிதி கையாளுதலில் சுய அதிகாரம் இருக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தி இருக்கிறார். மாநிலங்களின் வலிமை மற்றும் பங்களிப்பே, நாட்டு நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும்.
திட்டக் குழு என்பது, சிறப் பான வளர்ச்சித் திட்டங்களை மேற் கொள்வது குறித்து திட்டமிடல் மற்றும் ஆலோசனை கூறும் அமைப்பு என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் திட்டக் குழு இந்தப் பணிகளை செய்யத் தவறி, ஆலோசனை கூறும் அமைப்பு என்பதில் தவறிவிட்டது. பொது நிதிப் பங்களிப்பு திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் திட்டக் குழு தோல்வியடைந்துவிட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, தனியார் துறை வளர்ச்சி கண்டு விட்டது.
தற்போது திட்டக் குழுவுக்கு பதில் புதிய அமைப்பு ஏற் படுத்த பிரதமர் முயற்சிப்பது வரவேற்கத்தக்கது. மாநிலங்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சி பெற் றாலும், துரதிருஷ்டவசமாக மத்திய, மாநில அரசுகள் உறவு தொடர்ந்து பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. மாநிலங்களின் கருத்துகள் மற்றும் திட்டங்களில் திட்டக் குழு, மத்திய அமைச் சரவைகளின் அணுகுமுறை மோச மானதாக உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள், மத்திய அரசின் சமமான பங்குதாரர்களாக கருதப்படுவது இல்லை. மாநில அரசுகளுக்கு வாக்களித்த அதே மக்கள்தான் தங்களுக்கும் வாக்களித்துள்ளனர் என்பதை மத்திய அரசில் இருப் போர் மறந்துவிடுகின்றனர்.
புதிய அமைப்பிலாவது மாநில அரசுகளின் கருத்துகள் பரிசீலிக் கப்பட வேண்டும். மாநில முதல் வர்கள் இந்த புதிய அமைப்பில் முக்கியத்துவம் பெறுவதுடன், மாநிலங்களின் கருத்துகள் முறை யாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். புதிய அமைப்பில் மாநில முதல்வர்களின் கவுன்சில் என்பது ஒரு சடங்கான அமைப்பாக இல்லாமல், செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும். கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தி, அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை இருக்கக் கூடாது.
குறிப்பாக மாநிலங்கள் இடையே நதி நீர் தாவாவை தேசிய நதி நீர் ஒருங்கிணைப்புக் குழுமம் மூலம் தீர்த்து வைத்தல், எரிசக்தி துறையில் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி வழங்குதல், மின் தொடரமைப்பு வசதி ஏற்படுத்து தல், சுற்றுச்சூழல் துறை அனு மதியை விரைந்து வழங்குதல் போன்ற முக்கிய விஷயங்களில் முதல்வர்கள் கவுன்சிலுக்கு அதிகாரம் வழங்கி, கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு திட்ட நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சமற்ற வெளிப் படைத்தன்மை வேண்டும். திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக் கீட்டில் மத்திய, மாநில அரசுக ளின் அணுகுமுறை மறு சீரமைக்கப் பட வேண்டும். மத்திய நிதி ஆணையம் பரிந்துரைப்படி, மாநில செலவினங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
தேசிய சமூக உதவித் திட்டங் கள், மகப்பேறு உதவித் திட்டங்கள் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழக அரசு ஏற்கெனவே ஓய்வூ தியம், கல்வி உதவித் தொகை, மகப்பேறு உதவிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவற்றை நேரடி யாக வங்கிகள் மூலம் பயனாளி களுக்கு வழங்கி வருகிறது.
மண்ணெண்ணெய் மற்றும் உரம் உட்பட பொது விநியோகத் திட்டத்தில் நேரடி மானிய உதவி திட்டத்தை தமிழகம் எதிர்க்கிறது. ஏனெனில், இந்தப் பொருட்கள் மானியத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதைவிட தேவையான நேரத்தில் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
பல்வேறு திட்டங்களில் வழங்கப் படும் நேரடி மானியத்தை மாநில அரசுகள் மூலம் வழங்கினால் அது நிர்வாக ரீதியில் சரியானதாகவும், கூட்டாட்சி முறைக்கு உகந்ததாகவும் இருக்கும். எனவே, நேரடி மானியத் தொகையை மாநில அரசுகள் மூலம் வழங்கலாம். பயனாளி களுக்கான வசதிகள் அடிப் படையில் அவற்றை கூட்டுறவு வேளாண் வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் மூலம் தமிழக அரசு வழங்கும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை தமிழக அரசுக்கு அளிக்க வேண்டும். இதன்மூலம் ஆதார் எண் பதிவு விரைவாக முடிக்க முடியும். மேலும் தமிழக அரசின் திட்டங்களுக்கு இந்த விவரங் களை பயன்படுத்திக் கொள்ள முடியும். மத்திய அரசின் நேரடி மானியத் திட்டத்தில் மண்ணெண் ணெய் மற்றும் உரத்துக்கான மானியத்தை சேர்ப்பதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.