Published : 24 Dec 2014 10:02 AM
Last Updated : 24 Dec 2014 10:02 AM

வெளிநாட்டவர் பற்றிய விவரங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்: ஹோட்டல்கள், விடுதிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

இந்தியாவில் உள்ள தங்கும் விடுதி கள், ஹோட்டல்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை தங்களது இடத்தில் தங்கும் வெளிநாட்டவர் குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரக மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் தங்களின் விவரங்களை , வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக வெளிநாட்டவர் பதிவு அலுவலகங்களில் தரப்படும் படிவம் சி-யை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் நிறைய குளறுபடிகள் நடப்பதால், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தூதரக சேவைகளை நவீனப்படுத்தவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உள்துறை அமைச்சகம் இந்த புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. எனவே இந்தியா வரும் வெளிநாட்டவர்கள் தங்களை பற்றிய விவரங்களை http://boi.gov.in என்னும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல் ஹோட்டல்கள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், வீடுகள், மருத்துவமனைகள் போன்றவற்றில், வெளிநாட்டவர் கள் தங்கும்போது, அவர்களது விவ ரங்களை அந்தந்த தங்குமிடங் களின் உரிமையாளர்கள் ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும்.

இதை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் வழங்கப்படும். இது தொடர்பான சந்தேகங்களை chiochn@nic.in என்னும் மின்னஞ்சல் முகவரியையும், 044 28251721 என்னும் 24 மணி நேர தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x