

மானியம் வழங்கப்படாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.865-லிருந்து ரூ.752-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா விலை குறைந்ததால் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.113 குறைக்கப்பட்டது. இதனை எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்தது.
மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆண்டுக்கு 12 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் மானியமில்லாத சிலிண்டர்கள் பயன் அதிகம் ஏற்பட்டுள்ளது.
வீட்டு உபயோகமல்லாத எல்.பி.ஜி. விலை சிலிண்டருக்கு ரூ.170.5 குறைக்கப்பட்டது.
இதேபோல், ஜெட் எரிபொருள் விலை 4.1% குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 91 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 84 காசுகளும் குறைக்கப்பட்டது.
மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் கடந்த ஜூலையில் ரூ.922.50 என்பது குறிப்பிடத்தக்கது.