

ஐ.எஸ்.ஐ.ஸ். தீவிரவாத அமைப்பை இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை என மக்களவையில் கேள்வி நேரத்தின்போது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "ஐ.எஸ்.ஐ.ஸ். தீவிரவாத அமைப்பை இந்திய முஸ்லிம்கள் ஆதரிக்கவில்லை. தங்கள் குழந்தைகள் ஐ.எஸ்.-க்கு ஆதரவாக செயல்படுவதையும் அவர்கள் ஊக்குவிப்பதில்லை.
மேற்கத்திய நாடுகளில் பல சிறுபான்மை சமுதாயக் குடும்பங்களில் பெற்றோரே பிள்ளைகளை ஐ.எஸ்-ல் இணையுமாறு தூண்டிவருகின்றனர்.
இங்கு அவ்வாறு இல்லை. இதற்காக இந்திய முஸ்லிம்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் மிக சொற்ப அளவிலேயே இருக்கின்றனர். இணையத்தில் ஐ.எஸ். போன்ற அமைப்புகளுக்கு ஆதரவு உருவாவதை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழு விரைவில் அமைக்கப்படும்" என்றார்.