Last Updated : 11 Dec, 2014 10:18 AM

 

Published : 11 Dec 2014 10:18 AM
Last Updated : 11 Dec 2014 10:18 AM

கர்நாடக பேரவையில் செல்போனில் ஆபாசப் படம் பார்த்த பாஜக எம்எல்ஏ: ‘கேண்டிகிரஷ்’ விளையாடிய மற்றொரு எம்எல்ஏ

கர்நாடகத்தில் நேற்று நடை பெற்ற சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரின் போது பாஜக எம்.எல்.ஏ. பிரபு சவாண் தனது செல்போனில் ஆபாசப் புகைப் படங்களை பார்த்தார். மற்றொரு எம்எல்ஏ ‘கேண்டிகிரஷ்’ விளை யாடிக் கொண்டிருந்தார். இவற்றை, கன்னட தொலைக் காட்சி செய்திச் சேனல்கள் பதிவு செய்து ஒளிபரப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ண விதானசவுதாவில் நடந்து வருகிறது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது, கர்நாடகத்தில் அதிகரித் துள்ள பாலியல் பலாத்காரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க் கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே நேற்று மாலை பேரவைக் கூட்டத்தொடர் அனல் பறந்த போது பீதர் மாவட்டம் அவ்ராத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரபு சவாண் தனது செல்போனில் எதையோ உற்றுப்பார்த்துக் கொண்டி ருந்தார். பேரவையின் மாடத்தில் இருந்த கன்னட தொலைக் காட்சியின் ஒளிப்பதிவாளர்கள் பிரபு சவாணை, 'ஜூம்' செய்து பார்த்த போது, அவர் தனது செல்போனில் உள்ள ஆபாசப் படங்களையும், புகைப்படங் களையும் கையால் மறைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

மேலும், பிரபல அரசியல் தலைவரின் மகளுடைய புகைப் படத்தை மோசமான நோக்கில் 'ஜூம்' செய்து பார்த்து கொண் டிருந்தார். இதனை பதிவு செய்த கன்னட தொலைக்காட்சிகள் பாஜக எம்எல்ஏ பிரபுசவாண் ஆபாசப் புகைப்படம் பார்த்த வீடியோவை தொலைக்காட்சி யில் ஒளிபரப்பின. இதனால் பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கடும் தண்டனை தேவை

இதையடுத்து கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்ச நேயா பேசும்போது,'' பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கர்நாடக மக்களின் மானத்தை கேலிக்கூத்தாக்குவது வேதனை யளிக்கிறது.

கடந்த 2012-ம் ஆண்டு பாஜகவை சேர்ந்த 3 அமைச்சர்கள் சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. தற்போது பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ பிரபு சவாண் ஆபாசப் படம் பார்த்தது தெரியவந்துள்ளது.

இதனால் மீண்டும் ஒரு முறை பாஜகவினர் கர்நாடகத்துக்கு அவமானத்தை தேடி தந்துள் ளனர். பிரபு சவாணை பேரவைத் தலைவர் இடைநீக்கம் செய்ய வேண்டும். அனைத்துக் கட்சியின ரும் சேர்ந்து அவர் மீது கடும் நட வடிக்கை எடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பெண் களுக்கு எதிரான வன்முறை குறித் துப் பேசும் பாஜகவினர், முதலில் ஒழுக்கமுடன் நடந்துகொள்ள வேண்டும்''என்றார்.

கேம் விளையாடிய பாஜக எம்எல்ஏ

இந்த பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் அனல் பறந்துகொண்டிருந்த போது கன்னட தொலைக்காட்சிகள் இன்னொரு வீடியோவை ஒளிபரப்பின. அதில் ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூர் தொகுதி பாஜக‌ எம்எல்ஏ யூ.பி.பனக்கார் தனது செல்போனில் `கேண்டிகிரஷ்' விளையாடிக் கொண்டிருந்தார்.

இது தொடர்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசும் போது, “கர்நாடக சட்டப்பேரவை யில் பாஜகவை சேர்ந்த அமைச் சர்களும், எம்எல்ஏக்களும் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந் துக்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் பாஜகவுக்கு மாபெரும் தலை குனிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒட்டுமொத்த கர்நாடக மக்களின் பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் அவமானம் நேர்ந்துள்ளது''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x