Published : 21 Dec 2014 11:50 AM
Last Updated : 21 Dec 2014 11:50 AM

மணிப்பூரில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி; 4 பேர் காயம்

மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலி யானார்கள். 4 பேர் படுகாய மடைந்தனர்.

இம்பாலில் குயாதோங் பகுதியில் உள்ள பஸ் நிலையம் அருகே சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 4 பேர் படுகாய மடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் களின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்துக்கு மூத்த காவல் துறை அதிகாரிகளும், பாதுகாப்புப் படையினரும் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்புக்கு சம்பவத்துக்கு காரணமாக இருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இத்தாக்குதல் சம்பவத்துக்கு மணிப்பூர் முதல்வர் இபோபி சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்தில் நடைபெற்ற மூன்றாவது குண்டு வெடிப்பு சம்பவம் இதுவாகும். கடந்த 15-ம் தேதி இம்பால் சந்தையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 1 இளைஞர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி இம்பாலுக்கு வருகை தரவிருந்த நிலையில் கடந்த நவம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான் என்பது நினைவு கூரத்தக்கது.

வடகிழக்கு மாநிலங்களில் அரசுகளுக்கு எதிராக பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் வன்முறை யில் ஈடுபட்டு வருகின்றன.

நாடு சுதந்திரமடைந்தது முதல் தற்போது வரை நடந்த வன் முறைச் சம்பவங்களில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு மாநிலங்களில் மட்டுமே வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு மேற்கொள்வதாகவும், வடகிழக்கு மாநிலங்களை அரசு புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டும் தீவிரவாதக் குழுக்கள் பிரிவினைவாதக் கோரிக்கையுடன் வன்முறையில் ஈடுபட்டு வரு கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x