பிரதமர் மோடியின் மவுனம் சமூக சமநிலைக்கு பேராபத்து: காங்கிரஸ் கருத்து

பிரதமர் மோடியின் மவுனம் சமூக சமநிலைக்கு பேராபத்து: காங்கிரஸ் கருத்து
Updated on
1 min read

மதமாற்ற விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மவுனம் சமூக சமநிலைக்கு பேராபத்தாக அமையும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறியதாவது, "கர் வாப்ஸி என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் பாஜகவுக்கும் மிகவும் பிடித்தமான வாசகமாக இருக்கிறது.

மதமாற்ற விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுன விரதம் கடைபிடித்து வருகிறார். அவரது மவுன விரதம் சமூக சமநிலையை சீர்குலைத்துவிடும்.

இதுவரை பல்வேறு மாநிலங்களில் நடந்த மதமாற்ற, மறு மதமாற்ற நிகழ்ச்சிகளை மத்திய அரசு மவுனியாக வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. இதற்கு அர்த்தம் ஆர்.எஸ்.எஸ்.-அமைப்புக்கும் பாஜக அரசுக்கும் இடையே இவ்விவகாரத்தில் உடன்பாடு இருக்கிறது என்பதே. இந்த நிலை தொடர்ந்தால், நாடு மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்க வேண்டும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in