Last Updated : 24 Dec, 2014 11:06 AM

 

Published : 24 Dec 2014 11:06 AM
Last Updated : 24 Dec 2014 11:06 AM

இந்து மடங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்: கர்நாடக அரசின் முடிவுக்கு பாஜக கடும் கண்டனம்

கர்நாடகத்தில் உள்ள இந்து மடங்களை கட்டுப்படுத்தவும், அவற்றின் அதிகாரத்தை வரையறுக்கவும் புதிய சட்டம் இயற்றும் வகையில் அம்மாநில அரசு மசோதா தாக்கல் செய் துள்ளது. இதன் மூலம் நில மோசடி, சொத்து மோசடி, பாலியல் விவகாரங் களில் சிக்கும் மடாதிபதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக அரசின் இந்த புதிய‌ சட்டத் துக்கு பாஜக, சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத், ராம் சேனா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது இந்து மதத்துக்கும், இந்து மடாதிபதிகளுக்கும் எதிரான சட்டம் என மடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டபேரவை குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, மடங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். மடங்களை கட்டுப் படுத்த இந்த சட்டம் கொண்டுவர திட்டமிட்ட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கர்நாடக அரசு தாக்கல் செய்த அந்த மசோதா காங்கிரஸ் மற்றும் சில மஜதா உறுப்பினர்களின் ஆதர வுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

கர்நாடக அரசின் மடங்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.இந்நிலையில் சிவசேனா, ராம் சேனா, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய இந்துத்துவா அமைப்புகள்,காங்கிரஸ் அரசு இந்து மடங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிக்கிறது. இதனை ஒருபோதும் அமல்படுத்த விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ள‌ன.

பாஜக கடும் எதிர்ப்பு

பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அசோக் பெங்களூரு வில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

காங்கிரஸ் அரசு இந்து மடங்க ளையும், மடாதிபதிகளையும் கட்டுப் படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சித்துள்ளது. இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களின் மடங் களுக்கு எந்த கட்டுப்பாடும் இதில் விதிக்கப்படவில்லை. எனவே இந்து மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கு எதிராக தீட்டப்பட்டிருக்கும் மாபெரும் சதியை முறியடிக்க வேண்டும்.

இந்த சட்ட மசோதா நிறைவேறி னால் இந்து மடங்களுக்கும், பொதுமக்க ளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்படும். இதில் மடாதிபதிக ளுக்கு அதிக வரைமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.எனவே இதற்கு எதிராக மடாதிபதிகள் குரல் கொடுக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு பிறகே செயல்படுத்த முடியும் என்பதால், அனைவரும் இப்போதே போராட்டத்தில் குதிக்க வேண்டும்''என்றார்.

குற்றங்களை தடுக்கவே

இது தொடர்பாக கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா பேசும்போது, ‘‘சமீப காலமாக கர்நாடகத்தில் நடைபெற்று வரும் குற்ற ங்களை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்படுகிறது. பொது மக்களின் சொத்துக்களை மடாதிபதிகள் அபகரித்தால் அதில் அரசு தலையிடும். இந்த சட்டத்தின் மூலம் மடங்கள் தங்களுக்கான சட்டங்களை வகுப்பதை தடுக்க முடியும். எனவே மடங்களை சுற்றி நிகழும் குற்றங்களைத் தடுக்க முடியும்.

இந்த சட்ட மசோதா குறித்து மடாதி பதிகள் தங்களது கருத்துகளை அரசுக்கு தெரிவிக்கலாம்.ஆட்சேபகராமான அம்சங்கள் இந்தச் சட்ட மசோதாவில் இருப்பதாக தெரிவித்தால் திருத்திக் கொள்ளப்படும். மடங்கள் தொடர்பான சட்டத்திருத்த மசோதா குறித்து அனைத்துத் தரப்பினரிடமும் கருத்து கேட்டுள்ளோம்.

முற்போக்கு மடாதிபதிகள், எழுத்தாளர்கள் ஒப்புதல் தெரிவிக்கும் வரை மடங்கள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை செய‌ல்படுத்த மாட்டோம்''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x