கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த இ-ரூபாய்: பாதிரியாரின் யோசனை

கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த இ-ரூபாய்: பாதிரியாரின் யோசனை
Updated on
1 min read

காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும், பாஜக ஆட்சியாக இருந்தாலும் கருப்புப் பண விவகாரம் தொடர்கதையாகி வரும் நிலையில், கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த இ-ரூபாய் அறிமுகப்படுத்த வேண்டும் என கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க பாதிரியாரான ஆப்பிரஹாம் முலாமூட்டில் தனது எண்ணத்தை வெறும் யோசனையாக தெரிவிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் அதற்கு புத்தக வடிவம் கொடுத்துள்ளார்.

'E-rupee to Reinvent India' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாளை (சனிக்கிழமை) வெளியிடுகிறார். நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் குரியன் தலைமை வகிக்கிறார்.

இப்புத்தகம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த பாதிரியார், "இ-ரூபாய் அறிமுகம் செய்வதன்மூலம் கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில், இ-ரூபாய் பயன்படுத்தும்போது அனைத்து பண பரிவர்த்தனைகளும், கட்டண சேவைகளும் கண்காணிக்கப்படும். ஊழலையும் தடுக்க முடியும். காகிதத்தால் ஆன பணத்தை பயன்படுத்தாத ஒரு சமூகம் உருவாகும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in