

தெலங்கானாவில் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேச கட்சி ஆட்சியை பிடிக்கும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்ட நிகழ்ச்சியில் அவர் பேசிய தாவது:
ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டாலும் இரு மாநில விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடந்த முறை முதல்வராக இருந்தபோது, அரசு ஊழியர் களுக்கு ஊதியம்கூட வழங்க முடியாக நிலையில் இருந்து, மாநிலத்தை தகவல் தொழில்நுட்பத்தில் முதன்மை மாநிலமாக மாற்றினேன். தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிடையே எழும் கருத்து வேறுபாட்டினால் மக்கள்தான் பாதிக்கப்படுவார் கள் என்பதை தெலங்கானா அரசு உணர வேண்டும்.
வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் தெலங் கானா மக்கள் தெலுங்கு தேச கட்சியைத்தான் ஆட்சியில் அமர்த்துவார்கள்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.