

ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல்களில் பெற்ற வெற்றிகளை அடுத்து வாக்காளர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவிடும் போது, “ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட் மாநில பாஜக தொண்டர்களுக்கு எனது வாழ்த்துகள். அவர்களது கடின உழைப்பும் தன்னலமற்ற அர்ப்பணிப்பும் இல்லாவிட்டால் இத்தகைய முடிவுகள் வந்திருக்காது” என்றார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி குறித்து மோடி கூறும் போது, வாக்களிப்பில் சாதனை படைத்த ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும், “பாஜக மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைக்கு இதயத்தின் ஆழத்திலிருந்து அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஜார்கண்ட் வெற்றி பற்றி குறிப்பிடும் போது, “நிலையான ஆட்சிக்கு ஜார்கண்ட் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த மாநிலத்தின் உண்மையான சக்தியை உணர இது அவசியம். அவர்களை வாழ்த்துகிறேன்”
என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.