

மேற்குவங்க மாநிலம் புர்த்வானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஷானூர் ஆலம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அசாம் மாநில போலீஸார் நேற்று கூறும்போது, “புர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப் பட்டுள்ள முக்கிய நபரான ஷானூர் ஆலமை நல்பாரி மாவட்டத் திலிருந்து நேற்று முன்தினம் கைது செய்தோம். அசாம் மாநில காவல் துறை சிறப்பு பிரிவு தலைமையகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப் பட்டது. பின்னர் பலத்த பாதுகாப் புடன் அவரை காமரூபம் மாவட் டத்தில் உள்ள தலைமை மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தினோம். நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதி மன்றம் அனுமதி வழங்கியது” என்றனர்.
அசாம் மாநிலம் பார்பேட்டா மாவட்டம் சதாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலம். புர்த்வானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்று சந்தேகிக் கப்படும் இந்த நபர், ஜமாத்-உல்-முஜாஹிதீன் வங்கதேசம் (ஜேஎம்பி) தீவிரவாத அமைப் புக்கு நிதியுதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இவரைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் வெகுமதி தரப்படும் என தேசிய புலனாய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
புர்த்வான் மாவட்டம் காக்ரகர் பகுதியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒரு வீட்டில் நிகழ்ந்த வெடி விபத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் கைது செய்யப்பட்ட 2 பெண்களிடம் விசாரித்ததில் மேற்குவங்கத்தின் பல மாவட்டங்களில் தீவிரவாத அமைப்புகள் செயல்படுவதாக தெரியவந்துள்ளது. ஆலம் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரது மனைவி கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டார். கைதான மற்றொரு நபர் சாஜித் என்பவரிடம் நடத்திய விசாரணையில் ஆலமுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.