

நேபாளம் மற்றும் பூடான் நாடுக ளோடு இணைந்துள்ள இந்திய எல்லைப் பகுதிகளில், சமீபகால மாக சீன மையங்கள் மற்றும் பவுத்த மடாலயங்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்னை வருமோ என்று கவலை எழுந்துள்ளது.
அவ்வப்போது நிகழும் சீன ஊடுருவல்களால், ஏற்கெனவே ஜம்மு காஷ்மீர் எல்லையில் சீனாவுடன் இந்தியாவுக்குத் தகராறு உள்ளது. இந்நிலையில், நேபாளம் மற்றும் பூடான் நாடுகளோடு இந்தியா பகிர்ந்துகொண்டிருக்கும் எல்லைப் பகுதிகளில் சீன கலாச் சார மையங்கள் மற்றும் பவுத்த மடாலயங்கள் பெருகி வருகின்றன.
இதுகுறித்து `சஷ்த்ர சீமா பல்' எனும் எல்லைப் படைக்குழு தகவல் சேகரித்தது. அதன்படி, நேபாள பகுதிகளில் 22 சீன கல்வி மையங்கள் உள்ளன. இவற்றில் 11 மையங்கள் இந்திய நேபாள எல்லைப் பகுதி யில் அமைந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
"இந்த சீன கல்வி மையங்கள், நேபாள பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு சீன மொழி, கலை மற்றும் கலாச்சார விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறோம் என்று சொல்கின்றன. எனினும், இந்திய நேபாளம் மற்றும் இந்திய பூடான் ஆகிய எல்லைப் பகுதிகளில் வேலிகளோ அல்லது மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேறு ஏதேனும் பாதுகாப்போ இல்லாததால் தேசப் பாதுகாப்புக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படுமோ என்று கவலைப்படுகிறோம்" என்று அந்தப் படைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், இந்த மையங்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மக்கள் மனதில் விதைக்கின்றனவோ என்றும் சந்தேகிக்கிறோம் என்றார்.
இதேபோன்று பூடான் பகுதி களில் 22 பவுத்த மடாலயங்கள் உள்ளன. இதனாலும் தேச பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என்று எல்லைப் பாதுகாப்புக் குழு தன் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.