Last Updated : 11 Dec, 2014 10:27 AM

 

Published : 11 Dec 2014 10:27 AM
Last Updated : 11 Dec 2014 10:27 AM

கண்காணிப்பு இல்லாத வழிகளில் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி: மாநிலங்களவையில் அரசு தகவல்

இந்திய வங்க எல்லையில் கண்காணிப்பு இல்லாத சிறிய வழிகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள் துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

"இந்திய வங்க எல்லை, இந்திய பாகிஸ்தான் எல்லை மற்றும் இந்திய மியான்மர் எல்லைகளில் பாதுகாப்பு வேலிகள் நிறுவப்பட்டுள்ளன. எனினும் இந்திய வங்க எல்லை மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லை ஆகியவற்றில் ஆங் காங்கே துவாரங்களும், சந்து களும் உள்ளன. இவற்றைப் பயன் படுத்தி தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவுகிறார்கள்.

இதைத் தடுக்க எங்கெல்லாம் துவாரங்களும், சந்துகளும் உள் ளனவோ அங்கெல்லாம் 24 மணி நேர கண்காணிப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன" என்றார்.

ஐ.பி.எஸ். பற்றாக்குறை

நாட்டில் நிலவி வரும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றாக்குறை குறித்து அரசு சில நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாக கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

"இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, குடிமைப் பணிகள் தேர்வு மூலம் ஐ.பி.எஸ். பதவி களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மாநில காவல்துறை யில் பணியாற்றும் அதிகாரிக ளுக்குப் பதவி உயர்வு மூலம் ஐ.பி.எஸ். பதவிக்கான காலி இடங்களை நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, குறைந்த அளவிலான போட்டித் தேர்வு மூலம் ஐ.பி.எஸ். பதவிக்குத் தகுந்த நபர் களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறையிலான தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

21,000 தீவிரவாதிகள்...

1990-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை காஷ்மீர் மாநிலத் தில் 21,562 தீவிரவாதிகள் கொல்லப் பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

தவிர, 16,757 பொதுமக்களும் 1,425 காவல்துறை அலுவலர்களும் தீவிரவாத நடவடிக்கைகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச் சகம் தெரிவித்துள்ளது.

ரூ.140 கோடி வழிப்பறி

ஆண்டுக்கு ரூ.140 கோடி நக்ஸல் களால் வழிப்பறி செய்யப்படுகிறது என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், ஒப்பந்ததாரர்கள், அரசு அலுவலர் கள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் சுரங்க உரிமையாளர்கள் ஆகியோரிடம் இருந்து நக்ஸல்கள் வழிப்பறி செய்வதாக டெல்லியில் உள்ள ராணுவ கல்வியியல் மற்றும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

ஐ.எஸ்.தாக்குதல் இல்லை

உலகின் முக்கிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பு அல் காய்தா அமைப்புடன் இணைந்து இந்தியாவைத் தாக்கும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாகச் சில மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது.

ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் இருப்பதாகத் தெரிய வில்லை என்று உளவுத்துறை அமைப்புகள் தகவல் தெரிவித் துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில உள வுத்துறை அமைப்புகள் இந்த விஷயத்தில் இணைந்து பணி யாற்றுகின்றன என்றும், இதுவரை ஐ.எஸ். அமைப்பு இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவது குறித்து நம்பகமான தகவல்கள் ஏதும் இல்லை என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

2022-ல் அனைவருக்கும் வீடு

2022ம் ஆண்டுக்குள் வீடில்லாத அனைவருக்கும் வீடுகள் ஏற் படுத்தித் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "நாட்டில் சுமார் மூன்று கோடி பேர் தங்குவதற்கு வீடில்லாமல் உள்ளனர். இவர்களுக்கு வீடுகள் கட்டித்தர அரசு முடிவு செய் துள்ளது. இதில் தனியார் நிறுவனங் களும் பங்கேற்க வேண்டும். அவர் களுக்குச் சில சலுகைகளும் தரப் படும். தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல் படுத்தப்படும்" என்றார்.

கருப்புப் பண விவகாரம்

வெளிநாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய பணியாளர் அமைச்சகத்தின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, "இதற்காக, சிறப்புப் புல னாய்வுக் குழு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிப் பதற்கு தகவல் தொழில்நுட் பத்தை மிக வலிமையாகப் பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x