

முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 140.8 அடியை எட்டியுள்ள தால் அணைப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி அணை யில் 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு நேற்று மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மறுஆய்வு மனுவை கேரள அரசு தாக்கல் செய்துள்ளது. அது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.
தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், 142 அடி வரை நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. நேற்று நிலவரப்படி 140.8 அடி வரை அணையில் நீர் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்மட் டத்தை 136 அடியாக குறைக்க தமிழகத்துக்கு உத்தரவிடக் கோரி கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின், அதை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு 5 முறை கூடியுள்ளது. கடைசியாக நடைபெற்ற கூட்டத்தின்போது, அணையின் மதகு ஒன்றில் பழுது ஏற்பட்டு சரியாக செயல்படவில்லை. எனவே, நீரின் அளவை 136 அடிக்கு மேல் தேக்கி வைக்கக் கூடாது. வெள்ளம் ஏற்பட்டால், பெரியாறு பள்ளத்தாக்கில் வசிக்கும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தோம்.
நவம்பர் 1-ம் தேதி 136 அடி வரை அணையில் நீர் நிரம்பியிருந்தது. நவம்பர் 15-ம் தேதி நீர் மட்டம் 140.8 அடியை எட்டியுள்ளது.
பொதுவாக இந்த காலகட்டத்தில் முல்லை பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரை, வைகை அணைக்கு அனுப்பி தேக்கிவைப்பதை தமிழக அரசு வழக்கமாக கொண்டிருந்தது. ஆனால், இந்த முறை 142 அடி வரை நீரைத் தேக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறது. இதனால், அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் 50 லட்சம் பேர் அச்ச உணர்வுடன் உள்ளனர். எனவே, முல்லை பெரியாறு அணையிலிருந்து பெறப் படும் தண்ணீரின் மூலம் வைகை அணையின் முழு கொள்ளளவை எட்டிய பிறகுதான், இங்கு 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக் கலாமா, வேண்டாமா என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்.
மதகுகளில் ஏதாவது ஒன்று பழுது ஏற்பட்டிருந்தால், 136 அடிக்கு மேல் நீரைத் தேக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.