

ஜெர்மெனியின் லிச்டென்ஸ்டைன் வங்கியில் கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் 18 பேரை பற்றிய விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று அளித்தது.
அந்த 18 பேரின் பெயர்கள் மற்றும் கணக்கு விவரங்களை, சீல் வைத்த கவர் ஒன்றில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கு வைத்தது தொடர்பான இந்த 18 வழக்குகளில், வருமான வரித்துறை ஏற்கெனவே விசாரணையை முடித்துள்ளது.
இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களில் ஒருவர் இறந்து விட்டதால், 17 வழக்குகளில் தமது தரப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.