

ஜப்பானின் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசின் உயரிய குடிமக்கள் விருதான ‘தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோனியா பிளவர்ஸ்’ விருதுக்கு மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருது 1888-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாக முன்னாள் பிரதமர்கள், மூத்த அமைச்சர்கள், நீதிபதிகள், தூதர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் உயரிய விருதான "தி கிராண்ட் கார்டன் ஆப் தி ஆர்டர் ஆப் தி பவுலோவ்னியா பிளவர்ஸ்" விருதைப் பெற்றுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் உயரிய விருதை மன்மோகன் சிங் பெற்றுள்ள செய்தி மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.