ஏ.டி.எம் வேனில் இருந்து ரூ.1.5 கோடி கொள்ளை: டெல்லியில் துணிகரம்

ஏ.டி.எம் வேனில் இருந்து ரூ.1.5 கோடி கொள்ளை: டெல்லியில் துணிகரம்
Updated on
1 min read

வடக்கு டெல்லியில் உள்ள கமலா நகர் பகுதியில் ஏ.டி.எம்.-க்கு பணம் எடுத்துச் சென்ற வேனை வழிமறித்து துப்பாக்கி வைத்திருந்த மர்ம மனிதர்கள் ரூ.1.5 கோடி பணத்தைக் கொள்ளை அடித்தனர்.

இவர்கள் முயற்சியைத் தடுத்த ஏ.டி.எம். மைய காவலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகக் கூறபடுகிறது. பட்டப்பகலில் நடந்த துணிகரச் சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: டெல்லி பல்கலைக் கழகத்தின் வடக்குப்பகுதியில் இந்த துணிகரம் நடந்துள்ளது. சம்பவம் நடக்கும் போது நேரம் காலை 11 மணி. பங்களா சாலையில் உள்ள முன்னணி தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை நிரப்ப வேண்டும்.

சிடி வங்கி ஏ.டி.எம் அருகே வேன் வந்த போது இரண்டு மர்ம நபர்கள் அதன் காவலாளியை தாக்கினர். கொள்ளையை தடுக்க முயன்ற காவலாளியை இருவரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

மேலும் வேனில் பணத்துடன் வந்த தனியார் நிறுவன ஊழியர்களையும் அச்சுறுத்தி ரூ.1.5 கோடி பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர்.

சுடப்பட்ட காவலாளியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in