Published : 10 Nov 2014 08:57 AM
Last Updated : 10 Nov 2014 08:57 AM

கல்லூரி மாணவர்கள் ஆதரவளிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்

தனது புதிய கட்சிக்கு தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் ஆதரவு அளிக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் மாண வரணியில் இருந்த ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வாசன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. ஆழ்வார் பேட்டையில் உள்ள ஜி.கே.வாசனின் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் அதிகமான மாண வரணியினர் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் முடிந்த பின் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறிய தாவது:

எங்களது புதிய இயக்கத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஏராள மான மாணவர்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் அமைக் கக்கூடிய வலிமை மாணவர் சமு தாயத்தினரிடம் உள்ளது. தமிழ கத்தில் உள்ள மாணவர்கள் எங்களுடன் இணைந்து தமிழகத் தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை அமைக்க உறுதுணையாக இருக்க வேண்டும். மக்கள் விரும்பும் நல்லாட்சி அமைய மாணவர்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

எங்களது புதிய இயக்கத்தில் மாணவர்களுக்கு உரிய மரியாதை யும், அங்கீகாரமும் அளிக்கப்படும். தமிழக காங்கிரஸில் இருந்த மூத்த தலைவர்கள் தற்போது எங்க ளுடன்தான் இருக்கின்றனர். மேலும் இளைஞரணியினர், மகளிர ணியினரும் பெருமளவில் உள்ளனர். எங்கள் இயக்கத்தை முன்னெடுத்து செல்ல இது பெரிதும் உதவும்.

கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. சட்டப் பூர்வ நடவடிக்கைகளின்படி ஆவ ணங்கள் மற்றும் படிவங்கள் அனைத்தும் தேர்தல் ஆணை யத்திடம் தாக்கல் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இன்னும் ஒரு வாரத்துக்குள் புதுக்கட்சிக்கான பெயர் அறிவிக்கப்படும். இதைத் தொடர்ந்து திருச்சி பொதுக் கூட்டத்துக்கான தேதியும் அறி விக்கப்படும். இதற்கான ஆலோ சனைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் மூத்த தலை வர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், தமிழக காங். முன்னாள் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஞானசேகரன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x