Last Updated : 06 Nov, 2014 09:02 AM

 

Published : 06 Nov 2014 09:02 AM
Last Updated : 06 Nov 2014 09:02 AM

முல்லை பெரியாறு பிரச்சினை சட்ட வாய்ப்புகளை ஆய்வு செய்வோம்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேட்டி

பாதுகாப்பு காரணமாக, முல்லை பெரியாறு அணையின் அதிகபட்ச நீர்மட்டத்தை 136 அடி என்ற அளவிலேயே தொடர்வதற்கான சட்ட ரீதியான வாய்ப்புகள் குறித்து கேரள அரசு ஆலோசித்து வருவதாக அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை ஆலோசனைக் குப் பிறகு செய்தியாளர்களிடம் உம்மன் சாண்டி கூறியதாவது:

முல்லை பெரியாறு அணையைப் பார்வையிட்ட தலை மைச் செயலாளர், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரு வதை எனது கவனத்துக்கு கொண்டு வந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தக் கூடாது என்ற கேரள அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு நிராகரித்து விட்டது. ஆனால், இது தொடர்பான சட்டரீதியான வாய்ப்புகளை அரசு ஆலோசித்து வருகிறது.

120 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலம், கேரள எல்லைக்குள் அணை யின் கீழ்ப்பகுதியில் வசித்து வரும் மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் தமிழ கத்தின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், அணை பாது காப்பாக இருப்பதாகத் தெரி வித்தது. மேலும், அணையை வலுப் படுத்திய பின் 152 அடியாக உயர்த் தவும் கடந்த மே 7-ம் தேதி ஒப்புதல் அளித்தது. உச்ச நீதி மன்ற உத்தரவுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற் றப்பட்ட சட்டத்தையும் செல்லாது என அறிவித்து விட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x