Published : 13 Nov 2014 11:43 AM
Last Updated : 13 Nov 2014 11:43 AM

டிக்கெட் பரிசோதகரை தேட வேண்டியதில்லை: வருகிறது ரயில்வேயில் புதிய வசதி

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டி களில், பயணச்சீட்டு பரிசோதகரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை அறிவிக்கும் புது திட்டம் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

ரயில் பயணங்களின்போது, காத்திருப்புப் பட்டியலில் உள்ள தமக்கு இருக்கை ஒதுக்கப்படுமா என்பதை அறிந்து கொள்வது உட்பட பல்வேறு புகார், குறைகளைத் தெரி விப்பதற்காக பயணச்சீட்டு பரிசோத கரை (டிடிஇ) பயணிகள் தேட வேண்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட பெட்டியின் பரிசோதகர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு பெரும் சிரமம் ஏற் படுகிறது. இக்குறைபாட்டைக் களைய ரயில்களில் புதிய வசதி அறிமுகப் படுத்தப்பட உள்ளது.

இதன்படி, முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஒட்டப்படும் பயணி களின் பட்டியலுடன் அப்பெட்டிக்கான பரிசோதகர் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்படும். நீண்ட தூரப் பயணங்களில் பரிசோதகர் மாறி புதிதாக வருபவர் விவரங்களும் இதில் இடம்பெறும்.

அந்த எண்ணைத் தொடர்பு கொண் டால், பயணியை பரிசோதகர் நேரில் சந்தித்து, குறைகளைத் தீர்த்து வைப்பார்.

இது குறித்து மத்திய ரயில்வேதுறை அமைச்சக வட்டார அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: இந்த வசதி தற்போது டெல்லியில் இருந்து டேராடூன் சிரஞ்சீவி டூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிசோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரை வில் நாடு முழுவதும் உள்ள 16 ரயில் மண்டலங்களில் படிப்படியாக அறிமு கப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

முன்பதிவு செய்த பயணிகளின் தொலைபேசி எண்ணுக்கு, எஸ்எம்எஸ் மூலம் பரிசோதகரின் தொலைபேசி எண்ணை அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x