

நதிகளை இணைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநிலங்களில் விரைவில் இதற்காக பணிகள் தொடங்கும் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் சன்வார் லால் ஜாட் கூறினார்.
சன்வார் லால் தனது சொந்தத் தொகுதியான ஆஜ்மீரில் நேற்று பயணம் செய்தபோது இதனை கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, “நான் அமைச்சராகப் பொறுப் பேற்ற பின் நதிகள் இணைப்பு தொடர்பாக இரண்டு கூட்டங் களை கூட்டியுள்ளேன்.
ராஜஸ்தான் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்க முயற்சி செய்வேன். அதேநேரத்தில் பிற மாநிலங்களிலும் இதற்கான பணிகளை செய்வேன்.
ஆஜ்மீரை ஸ்மார்ட் நகரமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளேன். இதற்காக அனைத்து உதவிகளையும் செய்வேன்” என்றார்.