Published : 24 Nov 2014 11:09 AM
Last Updated : 24 Nov 2014 11:09 AM

குளிர்காலக் கூட்டத்தொடர் பலனளிக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வ மாகவும், பலனளிக்கும் வகை யிலும் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரி வித்தார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங் கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஆட்சியை நடத்துவதற்குரிய பொறுப்பை மக்கள் எங்களிடம் அளித்துள்ளனர். அதே போன்று, இந்த நாட்டை வழிநடத்திச் செல்வதற்குரிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் ஆக்கப் பூர்வமாக செயல்பட்டனர். அதே போன்ற ஒத்துழைப்பை இப்போதும் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அமைதியான சூழ்நிலையும், மனநிலையும் இருந்தால்தான் மக்களின் மேம் பாட்டுக்காக பல்வேறு நலப் பணிகளை செய்ய முடியும்.

குளிர்காலக் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

ஆனால், காப்பீட்டு மசோதா, கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. காப்பீடு சட்டத் திருத்த மசோதாவை ஆதரிப்பதா, எதிர்ப் பதா என்பதில் திட்டவட்டமான முடிவை எடுக்காமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி, மசோதாவை முழுவதுமாக படித்துப் பார்த்த பின்புதான் அது பற்றி கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x