

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டதில் வெளி நாட்டுக்கு கடத்த தயா ராக இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரங்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
கடப்பா மாவட்டம், ரயில்வே கோடூரு மண்டலம், குக்கல தொட்டி எனும் வனப்பகுதியில் நேற்று காலை போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுமார் 20 மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
அந்தப் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரங்கள் கடத்துவதற்கு தயாராக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கடப்பா மாவட்டம், பிரம்மாங்காரி மடம் மண்டலம், பட்டுமொடுகு வனப்பகுதியில் வனத்துறையினர் நடத்திய சோதனையில் 48 செம்மரங்கள் கடத்திய லாரி பிடிபட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.