மத்திய அரசு நிதி மக்களைச் சென்றடையவில்லை: ஒடிசா அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி மக்களைச் சென்றடையவில்லை: ஒடிசா அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

ஒடிசா மாநிலத்துக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி மக்களைச் சென்றடையவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசாவின் கட்டாக் மாவட்டம், சாலிபூர் நகரம், பாதபடா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஒடிசாவில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களுக் காக பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகை மக்க ளுக்கு சென்றடையவில்லை. நடுவழியில் திடீரென மாயமாகி விடுகிறது.

மதிய உணவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி வேறு சிலரின் வயிற்றை நிரப்ப அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி வேறு திசைக்கு திருப்பி விடப் பட்டுள்ளது. பிஜு ஜனதா தள ஆட்சியில் ஊழல் அதிகரித்து வருகிறது.

இவை தவிர மத்திய அரசு ஒதுக்கிய ரூ.5,000 கோடி நிதி மக்கள் பணிகளுக்கு பயன் படுத்தப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளது.

சுரங்க கொள்ளை

மாநிலத்தில் இரும்புத் தாதுக்கள், மக்னீசியம் ஆகியவை பெருமளவில் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இந்த சுரங்க கொள்ளை மூலம் சிலர் செல்வச் செழிப்புடன் கொழிக்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

வறுமை காரணமாக சுமார் 3500 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 10 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

ஒடிசாவில் அனைத்து இயற்கை வளங்களும் இருந்தும் ரங்கராஜன் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் வரிசையில் ஒடிசா முதலிடத்தில் உள்ளது. வறுமை காரணமாக மாநிலத்தின் 30 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் இடதுசாரி தீவிரவாதப் பிரச்சினை நிலவுகிறது.

மாநிலம் வளர்ச்சியடைய காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in