

இந்தோனேசியா நிலநடுக்கத்தின் காரணமாக இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை, இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் சனிக்கிழமை காலை 8.01 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவானது. இதனையடுத்து இந்தோனேசியா, ஜப்பான், தைவான், தெற்கு பசிபிக் தீவுகளில் சுனாமி தாக்கம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுனாமி ஏற்பட்ட சில நிமிடங்களில் இந்திய சுனாமி எச்சரிக்கை மையம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், பேரிடர் மேலாண்மை வாரியங்களுக்கும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற தகவலை அனுப்பியது.