Published : 14 Jul 2019 03:32 PM
Last Updated : 14 Jul 2019 03:32 PM

ரோஹிங்கிய முஸ்லிம்கள் தங்கள் நாடு திரும்பும் போது தங்குவதற்காக மியான்மரில் 250 வீடுகளைக் கட்டிய இந்தியா

மியான்மர் படைகளினால் இனப்படுகொலைகளை எதிர்கொண்டு வரும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் 7 லட்சம் பேர் வங்கதேச முகாம்களுக்கு தப்பி வந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹிங்கியர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப இந்திய அரசு உதவியுள்ளதாகக் கூறிஉள்ளது.

 

ஜூலை 9-ம் தேதி மியான்மர் தூதர் சவ்ரவ் குமார் முழுதும் கட்டப்பட்ட 250 வீடுகளை மியான்மர் அரசிடம் ஒப்படைத்துள்ளது. அதாவது புலம் பெயர்ந்தவர்கள் மீண்டும் வந்தால் இந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இந்த வீடுகளை மியான்மர் வசம் இந்தியா ஒப்படைக்கப்பட்டது.

 

2017-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி:

 

2017-ம் ஆண்டு இருநாட்டு அரசுகளும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த 250 வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதற்காக 5 ஆண்டுகளில் 25 மில்லியன் டாலர்கள் செலவு செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் 40 சதுர மீட்டர்கள் அளவு கொண்டதாகும். பூகம்பம், கடும் புயல், ஆகியவற்றைத் தாங்குமாறு இந்த வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 படுபயங்கர இனப்படுகொலைகள், பெண்கள் மீது பாலியல் பலாத்கார வன்முறை, வீடுகள் எரிக்கப்படுவன போன்ற கடும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட ஸ்வே ஸார், கையின் சுவாங் தாங், நான் தார் தாங் ஆகிய பகுதிகளில் இந்த 250 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் எந்த ஒரு குறிப்பிட்ட தேதியிலும் ரோஹிங்கியர்கள் இந்த வீடுகளுக்குத் திரும்புவதான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இது தவிர இந்தியா செய்து தர வேண்டிய 21 பிற திட்டங்களுக்கான நிதியையும் இந்தியாவிடமிருந்து மியான்மர் கோரியுள்ளது. இதில் சிறு கிராமங்கள் உருவாக்கம், பள்ளிக் கட்டிடங்கள் ஆகியவையும் அடங்கும்.

 

மியான்மாரில் நடந்த வன்முறைகளை அடுத்து ரோஹிங்கியர்களுடன் 400 இந்துக் குடும்பங்களும் அங்கிருந்து தப்பி வங்கதேசத்தில் கடுபலாங் முகாமில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

பொதுவான கருத்துக்கு மாறாக, மியான்மர் அரசு திரும்பி வரும் ரோஹிங்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்ப இந்தியா ஊக்கத்தொகையை உருவாக்க இந்தியா விரும்புவதாகவும் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20,000 ரோஹிங்கியர்கள் பெயர்கள் மியான்மர் அரசுக்கு சரிபார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதில் 13,000 பேர் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்தியா மட்டுமல்ல ஜப்பான், சீனா உள்ளிட்ட ASEAN நாடுகளும் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளன. ஆனால் ரோஹிங்கியர்களிடையே நம்பிக்கையை கட்டமைப்பது மிகமிகக் கடினம், அவர்களுக்காக வீடுகள் கட்டுவது என்னவோ எளிது என்று ஆசியான் நாடுகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x