Last Updated : 08 Jul, 2019 07:10 PM

 

Published : 08 Jul 2019 07:10 PM
Last Updated : 08 Jul 2019 07:10 PM

தனியார் மயமாக்கலை ஏற்கமுடியாது: ஏர் இந்தியா நிர்வாகக் கூட்டத்தில் தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியாவை விற்கும் அரசாங்கத்தின் இரண்டாவது முயற்சியை ஏற்க முடியாது என நிர்வாகத்துடனான சந்திப்புக்குப் பிறகு தொழிற்சங்க வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.

பட்ஜெட் அறிவிப்புகளைத் தொடர்ந்து, ஏர் இந்தியா சேர்மன் அஷ்வானி லோஹானி  ஏர் இந்தியாவின் தனியார் மயமாக்கல் திட்டம் குறித்து இன்று (திங்கள் கிழமை) விவாதிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அன்றே 3 தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசினார்.

பட்ஜெட்டில் ஏர் இந்தியாவுக்காக வரும் நிதியாண்டுக்காக மிகக் குறைந்த தொகை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல வருடங்களாக ஒரு பெரிய வடிகாலில் கரைந்துகொண்டிருக்கும் ஏர் இந்தியா தனது விமானத் தொழில் துறையிலிருந்தே வெளியேற அதன் ஆர்வத்தைக் காட்டி வருகிறது.

கடும் நிதிநெருக்கடியில் தள்ளாடும் ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கலில் சேர்ப்பதை வேலை பறிபோகும் அச்சத்தில் எதிர்க்கும் அனைத்திந்திய தொழிற்சங்கங்கள் எதிர்த்து வருகின்றன.

ஆனால் இப்பிரச்சினையில் மத்திய அரசு மிகவும் துரிதமாகச் செயல்பட்டு வருகிறது. வரும் அக்டோபருக்குள் தனியார் மயமாக்கல் செயல் முறையை முடிக்க மத்திய அரசு காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் இன்று தெரிவித்துள்ளன.

ஏற்க முடியாது

தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இது தொடர்பாக ஒரு தொழிற்சங்க செயற்பாட்டாளர் பிடிஐயிடம் டெல்லியிலிருந்து தொலைபேசி மூலம் பேசுகையில், ''தனியார்மயமாக்கல் நடவடிக்கை ஏர் இந்தியாவோடு தொடர்புடைய 13 தொழிற்சங்க அமைப்புகள் எதிர்க்க முடிவு செய்துள்ளன. இந்த பேச்சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

அப்போது பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள், எங்கள் வேலையை மாற்றிக்கொள்ள எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் எந்தவொரு காரணத்திற்காகவும் தனியார் மயமாக்கலை ஏற்கமுடியாது என்று நிர்வாகத்திடம் அவர்கள் தெரிவித்தனர்'' என்றார்.

கடந்த ஆட்சியில்

மோடி அரசாங்கமும், அதன் கடந்த கால ஆட்சியின்போது ஏர் இந்தியாவை விமான வணிகத்திலிருந்து வெளியேற முயற்சித்தது. ஆனால் அப்போது வாங்குபவரைப் பெற முடியவில்லை, அதனால் தனது தனியார் மயமாக்கல் திட்டங்களை அப்போது ஒத்திவைக்க வைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ''தற்போதைய நுண்பொருளாதார அளவுருக்களின் பார்வையில் அரசாங்கம் கவனமாகச் செயல்படும். எனவே மீண்டும் ஏர் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்காது என்றார். ஆனால் மத்திய நிறுவனங்கள் வாயிலாக தனியார் துறையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்'' என்றார்.

13 அகில இந்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

ஆனால் அனைத்திந்திய அளவில் செயல்பட்டுவரும் 13 தொழிற்சங்கங்களும் தனியார் மயமாக்கலை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏர் கார்ப்பரேஷன் ஊழியர் சங்கம்,ஏர் இந்தியா ஊழியர் சங்கம், இந்தியன் ஏர்லைன்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், அகில இந்திய விமான பொறியாளர்கள் சங்கம், இந்தியன் வணிக விமானிகள் சங்கம், இந்தியன் பைலட்ஸ் கில்ட், ஏர் இந்தியா விமான பொறியாளர்கள் சங்கம், ஏர் இந்தியா கேபின் குழுசங்கம், ஏர் இந்தியா பொறியாளர்கள் சங்கம், விமான போக்குவரத்துதொழில்சாலை ஊழியர்கள் கில்ட், அகில இந்திய சேவை பொறியாளர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த ஏர் இந்தியா அதிகாரிகள் சங்கம் ஆகிய 13 தொழிற்சங்கங்களும் கிங்பிஷர் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகியவை அடைந்த தோல்விகளுக்கு ஏர் இந்தியா மகாராஜவை தனியாருக்கு விற்பது ஒரு தீர்வு அல்ல என்று கூறி கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இது தவிர, ஆறு விமான நிறுவனங்கள், அனைத்தும் தனியார் நிறுவனங்களுடையவை. ஜெட் ஏர்வேஸ், ஏர் பெகாசஸ், ஏர் ஒடிசா மற்றும் ஏர் கோஸ்டா ஆகியவை பல்வேறு காரணங்களுக்காக தங்கள் போக்குவரத்தை 2014 முதல் ஏப்ரல் 2019 வரை நிறுத்திக்கொண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x