Last Updated : 05 Nov, 2014 11:13 AM

 

Published : 05 Nov 2014 11:13 AM
Last Updated : 05 Nov 2014 11:13 AM

கணவர் கண்ணெதிரே கொடூரம்: பெங்களூருவில் கத்திமுனையில் மனைவி பலாத்காரம்

பெங்களூருவில் போலீஸாரைப் போல நடித்து வீட்டிற்குள் நுழைந்த 4 பேர் கணவரின் கண்ணெதிரே மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் நால்வரையும் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்ற‌னர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் 21 வயதான தனியார் நிறுவன ஊழியர்கள் என்பதும், பெங் களூருவில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பெங்களூரு மாநகர காவல் இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் கூறியதாவது:

கடந்த அக்டோபர் 24-ம் தேதி இரவு 11.40 மணி அளவில் பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள ஒரு வீட்டின் கதவை 4 பேர் கொண்ட கும்பல் தட்டி இருக்கிறது. தாங்கள் போலீஸார் என்றும், ‘வீட்டில் கஞ்சா இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. தேடுதல் வேட்டை நடத்த வந்திருக்கிறோம்' என கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ள‌னர்.

அடுத்தக் கணமே அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி, மாமியார் ஆகியோரின் செல்போன்களையும் பிடுங்கி அணைத்துள்ளனர். கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் களின் கை மற்றும் வாயை துணி யால் கட்டிப்போட்டுள்ளனர். மேலும் அவர்களை தனி அறையில் அடைத்துவிட்டு, வீட்டின் பீரோவை உடைத்து ரூ.30 ஆயிரம் பணமும், 10 பவுன் நகையையும் கொள்ளை யடித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கணவர் மற்றும் மாமியாரின் கண் எதிரே 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை கத்தி முனையில் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனை மற்றவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

கைகளும், வாயும் கட்டப்பட்டி ருந்தால் அந்த‌ பெண்ணின் கணவ ராலும், மாமியாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. சில மணி நேரத்திற்கு பிறகு எழுந்த பெண், தனது கணவரின் கைகளை அவிழ்த்து விட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அக்டோபர் 25-ம் தேதி, அந்த பெண்ணின் கணவர் தங்களுடைய வீட்டில் திருட்டு போனதாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்த பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் குறித்த வழக்குகளை ஆராய்ந்தனர். மேலும் அந்த சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களையும் விசாரிக்க தொடங்கினர். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்த அந்த பெண் ணின் கணவர், தனது மனைவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர் பாகவும் புகார் அளித்தார்.

4 பேர் கைது

மேலும் பாதிக்கப்பட்ட பெண் ணின் கணவர் கூறிய விவரங்களை வைத்து போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதற்கு முன்பு பன்னார் கட்டா, பரப்பன அக்ரஹாரா, பி.டி.எம்.லே.அவுட் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை மற்றும் பலாத்கார சம்பவங்களுக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப் பதாக சந்தேகப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அந்த வழக்குகளில் குற்றவாளிகள் குறித்த விவரங்களையும், இவ்வழக்கில் கூறப்பட்ட விவரங்களையும் ஒப் பிட்டு பார்த்தனர். இந்நிலையில் ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் சிக்பள்ளாப்பூரில் உள்ள நகைக்கடையில் அடகு வைக்கப் பட்டு இருப்பதாக தகவல் வந்தது. இது தொடர்பாக போலீஸார் விசாரித்த போது, குற்றவாளிகள் குறித்து விவரம் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீ ஸார் கடந்த திங்கள்கிழமை பெங்களூருவை அடுத்துள்ள சிக்பள்ளாப்பூரில் நந்தீஷ், அனில் குமார், சுஜித் குமார், சைமன் ஆகிய நால்வரையும் கைது செய்தனர். 21 வயதான இவர்கள் பன்னர்கட்டா சாலையிலுள்ள கலேன அக்ரஹாரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது'' என்றார்.

இந்நிலையில் கைது செய்யப் பட்ட நால்வரையும் ரகசிய இடத்தில் வைத்து, அவர்கள் வேறு ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் பலாத்கார சம்பவங்களால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x