ஆபத்தான பாலம் வழியே செல்லும் அமர்நாத் பயணிகள்: வைரலாகும் வீடியோ

ஆபத்தான பாலம் வழியே செல்லும் அமர்நாத் பயணிகள்: வைரலாகும் வீடியோ
Updated on
1 min read

அமர்நாத் யாத்திரையின் ஒரு பகுதியான பால்டாலில் ஒரு நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் செல்லும் வழியில் ஒரு பாறை பாலத்தைக் கடக்க இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (ஐடிபிபி) வீரர்கள் யாத்ரீகர்களுக்கு உதவும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், அமர்நாத் யாத்திரையின் பால்டால் பாதையில் உயரமான நீர்வீழ்ச்சி விழும் இடத்திலில் அமைந்து பாலத்தின்வழியே அருவியிலிருந்து உருண்டுவரும் கற்களைப் பொருட்படுத்தாமல் திபெத் இந்திய எல்லைக் காவல் ஊழியர்கள் யாத்ரீகர்களை பாதுகாப்பதை காணமுடிகிறது.

ஐடிபிபி பணியாளர்களை உற்சாகப்படுத்துவதாகவும், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் மற்றும் ஐடிபிபி ஜிந்தாபாத் என்ற முழக்கங்களை எழுப்புவதையும் யாத்ரீகர்களுக்கு கேட்கிறது.

இதுகுறித்து ஏஎன்ஐயிடம் பேசிய யாத்ரீகர்களில் ஒருவர் கூறுடிகயில் ''இந்தமாதிரி இடங்களில் ஒருவர் உதவ முன்வருவது எளிதல்ல, தங்கள் உயிரைப் பணயம் வைத்து. ஆபத்தான வழித்தடங்களில் எங்களுக்கு உதவி செய்த ஐடிபிபி பணியாளர்களுக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம்'' என்றார்.

இந்த வீடியோ பெருமளவில் ட்விட்டரில் பரவலான பின்னர், ஐடிபிபி வீரர்களின் தன்னலமற்ற சேவைக்காக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

''ராணுவத்தை நாங்கள் மதிக்கக் காரணம் இதுதான். எங்கள் உயிரைப் பாதுகாக்க அவர்கள் எப்போதும் தங்கள் உயிரைத் தியாகம் செய்கிறார்கள்'' என்று ஒரு ட்விட்டர் நெட்டிசன் எழுதினார்.

ஜூலை 1 ஆம் தேதி, மாசிக் சிவராத்திரியின் நாளில் தொடங்கி 46 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 15 அன்று, ஷ்ரவன் பூர்ணிமா நாளில் நிறைவடைகிறது.

3,888 மீ உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகை இந்துக்களின் புனிதமான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் பாரம்பரிய 36 கி.மீ பஹல்காம் பாதையிலிருந்தும், காண்டர்பால் மாவட்டத்தில் 14 கி.மீ பால்டால் வழியிலிருந்தும் இந்த யாத்திரை செல்கிறது.

மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களை ஈர்க்கிறது. புனித குகை அவர்கள் வரும் காலகட்டத்தில் மட்டும் திறந்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in