மதரஸா சிறுவர்களை ஜெய் ஸ்ரீராம் சொல்ல கட்டாயப்படுத்தி யாரும் தாக்கவில்லை: உ.பி. அரசு மறுப்பு

மதரஸா சிறுவர்களை ஜெய் ஸ்ரீராம் சொல்ல கட்டாயப்படுத்தி யாரும் தாக்கவில்லை: உ.பி. அரசு மறுப்பு
Updated on
1 min read

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னவ் மாவட்டத்தில் முஸ்லிம் சிறுவர்களை ஜெய் ஸ்ரீராம் கூறச்சொல்லி அடித்ததாக வெளியான செய்தி தவறானது, அது வதந்தி என்று உத்தரப்பிரதேச அரசு விளக்கம் அளித்துள்ளது.

உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மதராஸாவில் பயிலும் மாணவர்கள் சிலர் நேற்றுமுன்தினம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப்பின் அவர்கள் கிழிந்த ஆடையுடன் மதராஸாக்குள் சென்றபோது, அவர்களிடம் மதராஸா இமாம்கள் விசாரித்தனர்.

அப்போது, அந்த சிறுவர்கள், தங்களை சிலர் தங்களை பிடித்து வைத்து ஜெய்ஸ்ரீராம் கூறச்சொல்லி அடித்ததாக  புகார் அளித்தனர். இதையடுத்து, மதஸா இமாம்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர்.  பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் இதை செய்திருக்கிறார்கள் என்று இமாம்கள் குற்றம்சாட்டினார்கள்.

போலீஸார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர், தங்களின் பேஸ்புக் கணக்கில் தங்களை பஜ்ரங் தள அமைப்பினர் என்று பதிவு செய்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதைபோன்று கடந்த 4-ம் தேதி ஆட்டோஓட்டுநர் முகமது அதிப் என்பவரை சிலர் ஜெய் ஸ்ரீராம் கூறச்சொல்லி கல்வீசித் தாக்கியுள்ளார்கள். ஆனால், கழிவறைக்குள் ஒளிந்துகொண்டு கூறமுடியாது என்று மறுத்துவிட்டார்.

இந்நிலையில், மதரஸா மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் கூறச்சொல்லி எழுந்த செய்தி உண்மைக்கு மாறானது என்று அந்த செய்தியை உத்தரப்பிரதேச அரசு மறுத்துள்ளது.

உத்தப்பிரதேச அரசின் முதன்மைச் செயலாளர் அவினாஷ் அஸ்வதி லக்னோவில் நிருபர்களிடம் கூறுகையில், " கிரிக்கெட் விளையாடிய இரு தரப்பு சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு சட்டை கிழிந்துள்ளது.

மதராஸாவில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களை யாரும் ஜெய் ஸ்ரீராம் கூறச்சொல்லி அடிக்கவில்லை. இதுபோன்ற வரும் செய்திகள் தவறானவை. உண்மைக்கு மாறானவை. உத்தரப்பிரதேச அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இதுபோன்ற செய்திகள் பரப்பிவிடப்படுகின்றன. சமூக ஒற்றுமையை குலைக்கவே இது போன்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன " என விளக்கம் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in