மம்தா பானர்ஜி ‘மீம்ஸ்’ வழக்கு: மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மம்தா பானர்ஜி ‘மீம்ஸ்’ வழக்கு: மேற்கு வங்க அரசுக்கு  உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை விகாரமாக சித்தரித்து மீம்ஸ் வெளியிட்டு கைதாகியுள்ள பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவை விடுவிப்பதில் தாமதம் ஏன் என்று உச்சநீதிமன்றம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாஜகவின் யுவ மோர்ச்சா நிர்வாகி பிரியங்கா சர்மா, இவர் நடிகை பிரியங்கா சோப்ராவின் புகைப்படத்தில் மம்தாவின் ஒட்டி மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அப்படம் வைரலாகிய நிலையில் அவர் மேற்கு வங்க அரசால் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இம்மனுவில் பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மாவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் அவரை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது,

பாஜக ஆர்வலரின் சகோதரர் ராஜீவ் சர்மா தாக்கல் செய்த அவமதிப்பு மனு விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இது தொடர்பாக விளக்கம் கேட்டு மேற்கு வங்க மாநில அரசுக்கும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது

பாஜக யுவ மோர்ச்சா தலைவரான பிரியங்கா சர்மா, இந்திய தண்டனைச் சட்டத்தின் 500 (அவதூறு) பிரிவின் கீழ் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிகளின் கீழ் மேற்கு வங்க காவலர்களால் மே 10 அன்று கைது செய்யப்பட்டார்

திரிணாமுல் காங்கிரல் கிட்சியின் உள்ளூர் நிர்வாகி ஒருவரின் புகாரின்பேரில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மே 14 அன்று, பிரியங்கா சர்மாவுக்கு உச்சநீதிமன்றத்தின் விடுமுறை பெஞ்ச் ஜாமீன் வழங்கியது.

நீதிமன்றத்தின் உத்தரவு மே 14 பிறப்பிக்கப்பட்டபோதும் தனது சகோதரியை சிறையில் இருந்து விடுவிப்பதில் 24 மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி ராஜீவ் சர்மா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in