Last Updated : 09 Jul, 2019 07:39 PM

 

Published : 09 Jul 2019 07:39 PM
Last Updated : 09 Jul 2019 07:39 PM

பாதுகாப்பு உள்ளதா? சென்னை, அகமதாபாத் விமான நிலைய இயக்குநர்களுக்கு நோட்டீஸ்

இந்திய வான்வழிப் போக்குவரத்து தலைமை இயக்குனரகம், சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலைய இயக்குநர்களுக்கு விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பாதுகாப்பு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

இது தொடர்பாக இம்மாதத் தொடக்கத்தில் இந்திய விமானப்போக்குவரத்து தலைமை இயக்குனரகம் விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொண்டன.

 

இதனையடுத்து சென்னை விமான நிலைய இயக்குநர் ஜி.சந்திரமவுலி, அகமதாபாத் விமான நிலைய இயக்குநர் மனோஜ் கங்கல் ஆகியோருக்கு டிஜிசிஏ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 15 நாட்களுக்குள் இவர்கள் விளக்கம் அளிக்கக் கோரப்பட்டுள்ளது.

 

“விமானநிலையத்தின் முக்கியப் பகுதிகள் பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

 

தற்போதைய பருவமழை சீசனில் விமானநிலையங்களில் ஓரிருமுறை விமானங்கள் தரையிறங்கும் போது பிரச்சினைகள் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த மாதத்தில் முன்னதாக மழையால் பாதிக்கப்பட்ட மும்பை விமானநிலையத்தின் முக்கிய ஓடுபாதை 3 நாட்களுக்கு போக்குவரத்துக்கு மூடப்பட்டது. காரணம், ஜெய்ப்பூரிலிருந்து வந்து தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ஜூலை 1ம் தேதி இரவு ஓடுபாதையிலிருந்து விலகி அருகில் உள்ள புல்வெளியில் சிக்கியது என்பதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x