Last Updated : 03 Jul, 2019 01:18 PM

 

Published : 03 Jul 2019 01:18 PM
Last Updated : 03 Jul 2019 01:18 PM

சாலையைக் கடக்க முயன்றபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி

மத்தியப் பிரதேசத்தில் சாலையில் வெள்ளத்தைக் கடக்க முயன்றபோது பைக்கில் வந்தவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதை நேரில் பார்த்த ஒருவர் இதன் மொத்த சம்பவத்தையும் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

சிறிது நேரத்தில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவரை அங்கிருந்த மக்கள் ஓடிச்சென்று பத்திரமாக மீட்டனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தூர், போபால் மற்றும் ஜபல்பூர் ஆகிய பகுதிகளுக்கு கடுமையான மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு மையத்தின் விஞ்ஞானி அஜய் ஷுக்லா தெரிவிக்கையில், ''பருவமழை இன்னும் சம்பல் மற்றும் குவாலியரை அடையவில்லை. மீதமுள்ள மத்தியப் பிரதேசத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளும் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த முறை நல்ல மழைக்கான வானிலை அமைப்பு நிலவுகிறது'' என்றார்.

பலத்த மழை காரணமாக, கார்கோன் மாவட்டத்தின் பழங்குடி மண்டலத்தில் சாலைகள் நீரில் மூழ்கின. நதிகளிலிருந்து பெருகிய வெள்ளத்தினால் சாலைகள் நெரிசலில் சிக்கியுள்ளன. சாலைகள் நீரினால் முற்றுகையிடப்பட்டிருப்பது இரு சக்கர வாகனங்கள் மற்றும் மாட்டு வண்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேசத்தைத் தவிர, உத்தரகண்ட், சத்தீஸ்கர், தெற்கு குராஜாத் பகுதி, கரையோர கர்நாடகா, கேரளா, அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் தெலங்கானா ஆகிய இடங்களில் கனமான முதல் மிக அதிக மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x