Published : 04 Jul 2019 09:25 PM
Last Updated : 04 Jul 2019 09:25 PM

2030-ம் ஆண்டுகளில் சில மாநிலங்களில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்து வருவதாகவும்  சமீபத்திய பத்துவருடங்களில் மொத்த கருத்தரித்தல் விகிதம் (TFR) வேகமாகக் குறைந்து வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

2018-19-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவின் மக்கள் தொகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ``அடுத்த 20 இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவு குறைந்துவிடும்.

மக்கள் தொகை அதிகம் என்ற நிலை நாட்டில் நீடிக்கும் என்றாலும், மக்கள் தொகை நிலை மாற்றத்தில் முன்னேறிய நிலையில் இருக்கும் சில மாநிலங்களில் 2030-களில் சமூகத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். 2041-ம் ஆண்டு வரையில் தேசிய மற்றும் மாநில அளவில்  மக்கள் தொகை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சியில் அடுத்தகட்டத்தை நோக்கி இந்தியா செல்கிறது. அடுத்த இருபது வருடங்களில் மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறைவாக இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமீபத்திய பத்துவருடங்களில் மொத்த கருத்தரித்தல் விகிதம் (TFR) வேகமாகக் குறைந்து வருவது தான் இதற்குக் காரணம். 2021-ம் ஆண்டு வாக்கில், மரணிப்போரைவிட, புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் தொகை வளர்ச்சி அனைத்து பெரிய மாநிலங்களிலும் குறைந்து வரும் நிலையில், பீஹார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற காலங்காலமாக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களிலும் இது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x