Published : 10 Jul 2019 04:19 PM
Last Updated : 10 Jul 2019 04:19 PM

ட்விட்டரில் ராகுல் காந்தியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்வு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சமூக ஊடகமான ட்விட்டரில்  பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது.

இந்த மைல்கல் விஷயத்தை அமேதியில் கொண்டாடப்போவதாக ராகுல் காந்தி ட்விட்ரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ட்விட்டரில் ராகுல் காந்தி இணைந்தார், கடந்த 4ஆண்டுகளில் அவருக்கு ஒரு கோடிபேர் பின்தொடர்ந்துள்ளார்கள். ஆனால், 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ட்விட்டரில் இணைந்த பிரதமர் மோடிக்கு தற்போது 4.85கோடி பேர் பாலோயர்ஸ் இருக்கின்றனர்.

இந்த மைல்கல் நிகழ்வு குறித்து ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் கூறுகையில், " ட்விட்டரில் எனக்கு ஒரு கோடிபேர் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். இந்த நிகழ்வை நான் அமேதியில் கொண்டாடப்போகிறேன். இன்று காங்கிரஸ் கட்சித் தொண்டர்களையும், ஆதாரவாளர்களையும் அங்கு சென்று சந்திக்கப் போகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் தோல்விக்கு பின் இன்று ராகுல் காந்தி அமேதி தொகுதிக்குச் சென்றார். கடந்த 3 முறை அமேதி எம்பியாக இருந்த ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இராணியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அமேதி தொகுதிக்குச் சென்ற ராகுல் காந்தியை, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் சந்தித்துப்பேசினார். காங்கிரஸ் தோல்வியை நினைத்து பல தொண்டர்கள் ராகுல் காந்தியிடம் கண்ணீர்விட்டு அழுதனர். தொண்டர்களைச் சந்தித்தபின்  அமேதியில் உள்ள கவுரிகாஞ்ச் பகுதியில் உள்ள நிர்மலா கல்விநிறுவனத்தில் கட்சித் தொண்டர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமேதியில் ஏன் தோல்வி ஏற்பட்டது, காரணங்கள் என்ன என்பதுகுறித்தும் ஆலோசனை நடத்தும் ராகுல் காந்தி, மக்களிடமும் குறைகளைக் கேட்க உள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x