Last Updated : 04 Jul, 2019 12:00 AM

 

Published : 04 Jul 2019 12:00 AM
Last Updated : 04 Jul 2019 12:00 AM

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்: வரிச்சலுகைகள் இருக்குமா என எதிர்பார்ப்பு

மத்திய அரசின் பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில் வரிச்சலுகைகள் இருக்குமா என்று பொதுமக்கள் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறை யாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்திராகாந்திக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் பட் ஜெட் தாக்கல் செய்யும் இரண் டாவது பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறவுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் இடைக் கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சிக்கு வரும் வரையிலான நான்கு மாத செலவினங்களுக்கான ஒப்புதல் கேட்கும் பட்ஜெட் டாக அது அமைந்தது. இதைத் தொடர்ந்து முழு பட்ஜெட் தற் போது தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த பட்ஜெட்டில் கட்டிடத் துறை, சேவை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை வளர்ச்சிக்கு முக்கியத் துவம் தரப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் ஆகிய இரண்டும் மத்திய அரசின் முன்பு மிகப் பெரிய 2 சவால்களாக உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைக்கால பட்ஜெட்டில் நடுத்தர மக்களைக் கவரும் வண்ணம் வருமான வரிச் சலுகை அறிவிக்கப்பட்டது. அதைப் போலவே ரூ.75 ஆயிரம் கோடிக்கு சிறிய விவ சாயிகளுக்கான வருமானத் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்தது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தையும் அரசு அறிவித்தது.

மேலும் தற்போது தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நீர் ஆதார நிர்வாகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலத் தடி நீர் பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே நீர் வளத்தைப் பெருக்கு வதற்கான அறிவிப்புகள் பட் ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலையின்மை

நாட்டில் வேலை இல்லா தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பருவமழை அளவுகளும் குறைந்து, விவ சாய வளர்ச்சியும் பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலும் நாட்டில் நிறுவனங்களுக்கு தொழில் வியாபாரம் செய்ய போதுமான அளவு நிதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

பொதுத்துறை வங்கிகள் அவைகளே உருவாக்கிக் கொண்ட நஷ்டங்கள் காரண மாக மூலதன நிதிப் பற்றாக் குறையில் தவித்து வருகின்றன. ஏற்றுமதியிலும் சுணக்கம் காணப்படுகிறது. அரசு மற் றும் தனியார் முதலீடுகள் அதிகரிக்கவேண்டிய தேவை இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகை கள் இருக்கும் என பொது மக்கள் எதிர்பார்த்துக் காத் திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x