Published : 12 Jul 2019 02:57 PM
Last Updated : 12 Jul 2019 02:57 PM

‘‘முறைத்துப் பார்த்தால் பயந்து விடுவோமா?’’ - சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடுவை சரமாரியாக விமர்சித்த ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரா சட்டப்பேரவையில் தன்னை விமர்சித்த தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக கண்டித்து பார்த்தார். நாங்கள் எழுந்து வந்தால் நீங்கள் அவையில் இருக்க மாட்டீர்கள் என அவர் கூறினார்.

ஆந்திரா சட்டப்பேரவையில் நேற்று  விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது தொடர்பான பிரச்சினை குறித்து விவாதம் நடந்தது. அப்போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி  வட்டியில்லா கடன்கள் குறித்து தவறான தகவல்களைப் பதிவு செய்வதாக எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் உரிமை மீறல் தீர்மானம் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தவறான தகவல்களை அளித்ததை நிருபித்தால் அவர் பதவி விலக தயாரா என கேள்வி எழுப்பினார். அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அவரது கட்சி எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் கோபமடைந்தார். அப்போது குறுக்கிட்ட அவர் சந்திரபாபு நாயுடுவை பார்த்து ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில் ‘‘ஆளும் கட்சியைச் சேர்ந்த நாங்கள் 150 பேர் இருக்கிறோம். எழுந்து வந்தால் நீங்கள் தரையில்கூட அமர முடியாது.

எங்கள் எம்எல்ஏக்களை நான் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் மரியாதை இல்லை, கௌரவம் இல்லை. நீங்கள் இப்படி கண்களைப் பெரிதாக்கி முறைத்துப் பார்த்தால் நாங்கள் பயந்து விடுவோமா. எங்களுக்கு பயம் இல்லை. உங்கள் எம்எல்ஏக்களை அமரச் சொல்லுங்கள்’ எனக் ஆவேசமாக கூறினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாக வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x