Last Updated : 12 Jul, 2019 06:30 PM

 

Published : 12 Jul 2019 06:30 PM
Last Updated : 12 Jul 2019 06:30 PM

டெல்லி வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவ தடை கோரும் மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லியில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை வைக்க டெல்லி அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து செய்யப்பட்ட மனுவை  உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

டெல்லியின் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் 20 வயது சட்ட மாணவர் அம்பர் டிக்கூ தாக்கல் செய்த பொது நலன் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

1.46 லட்சம் சி.சி.டி.வி.களை வகுப்பறைகள் மற்றும் அரசு பள்ளிகளின் ஆய்வகங்களில் நிறுவும் டெல்லி அரசு திட்டத்தை மனுதாரர் விரும்பினார்.

இதுகுறித்து வழக்கு தொடுத்த மனுதாரர், மாணவர்களின் சுதந்திரத்தையும் குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் ஆசிரியர்களின் சுதந்திரத்தையும் பாதிப்பதாக நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்தார்.

அப்போது வாதிட்ட வழக்கறிஞர்கள், ''சில பள்ளிகளில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களின் அடிப்படையில் டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா 2017 செப்டம்பர் 11 அன்று ஏற்பாடு செய்த அவசர கூட்டத்தில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் முடிவு எடுக்கப்பட்டது. பொது உதவி பெறும் பள்ளிகள் இந்த முடிவை பின்பற்றுவதை அரசாங்கம் கட்டாயமாக்கியது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை வைத்திருப்பதற்கு இது உதவும்'' என்றனர்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர், ''சி.சி.டி.வி கேமராக்கள் குறித்த முடிவை ஒதுக்கி வைக்கவும், சி.சி.டி.வி காட்சிகள் தொடர்பான ஆன்லைன் இணைப்பை பெற்றோருக்கு வழங்க வேண்டும்'' எனவும் மனுதாரர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவிக்கையில், அத்தகைய நடவடிக்கையின் தாக்கங்கள் குறித்து எந்தவொரு ஆராய்ச்சியும் ஆய்வும் மேற்கொள்ளாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா நிறுவுவதன்மூலம் இளங்குழந்தைகள் மத்தியில் உளவியல் ரீதியான பாதிப்புகளை கருத்தில்கொள்ளாமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், முடிவெடுப்பதற்கு முன்னர் பெற்றோர் அல்லது ஆசிரியர்களின் ஒப்புதல் எதுவும் பெறப்படவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி.கள் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் அதிர்ச்சியளிக்கும் தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்று மனுதாரர் கூறினார்.

டிசம்பர் 11, 2017 அன்று, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் வகுப்பறையைப் பார்க்க ஆன்லைன் இணைப்பை வழங்க முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x