Last Updated : 03 Jul, 2019 06:23 PM

 

Published : 03 Jul 2019 06:23 PM
Last Updated : 03 Jul 2019 06:23 PM

ட்விட்டர் கணக்கிலிருந்து காங்கிரஸ் தலைவர் பதவி விவரத்தை அகற்றிய ராகுல்

ராகுல் காந்தி தனது ராஜினாமாவை உறுதிபட அறிவித்ததை அடுத்து அடுத்த சில மணிநேரங்களில் ட்விட்டர் சுயவிவரப் பகுதியில் இடம் பெற்றிருந்த 'காங்கிரஸ் தலைவர்' என்ற தனது பதவி விவரத்தையும் அகற்றினார்.

தற்போது அவரது சுயவிவரக் குறிப்புப் பகுதியில், ''இது ராகுல் காந்தியின் அதிகாரபூர்வ கணக்கு | இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் | நாடாளுமன்ற உறுப்பினர்'' ஆகிய தகவல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

தனது ராஜினாவை இன்று உறுதிபட அறிவித்த ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

''இனி காங்கிரஸ் தலைவராக நான் நீடிக்கப் போவதில்லை. இந்த அழகான தேசத்தின் உயிர்நாடியாக" திகழ்ந்த, மதிப்புகள் மற்றும் லட்சியங்கள் மிகுந்த கட்சிக்கு சேவை செய்வது ஒரு கவுரவம் ஆகும். காங்கிரஸின் தலைவராக, 2019 மக்களவைத் தேர்தலில் கட்சியின் இழப்புக்கு நானே காரணம். எங்கள் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு பொறுப்பு எடுத்துக் கொள்வது முக்கியமானது.

இந்த காரணத்தினால்தான் நான் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். புதிய கட்சித் தலைவரைக் கண்டுபிடிக்கும் பணியை காங்கிரஸ் செயற்குழுவிடம் ஒப்படைக்கப் பரிந்துரைத்துள்ளேன். மேலும் எனக்கு அடுத்தபடியாக ஒரு வாரிசை நானே தேர்ந்தெடுப்பது சரியானதல்ல. புதிய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர் நாட்டிற்கும் அவரது அமைப்புக்கும் கடமைப்பட்ட நன்றியுணர்வையும் அன்பையும் செலுத்தக் கடன்பட்டுள்ளார்''

இவ்வாறு ட்விட்டர் கடிதத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x