

உத்தரப் பிரதேசத்தில் "ராம் சரித்ரா மனஸ்" மற்றும் "கீதை" ஆகிய இந்து வேதங்களைப் படித்துக்கொண்டிருந்த முஸ்லீம் ஒருவர் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டார்.
அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் தில்ஷெர் (55), பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வரும் இவர் 1979லிருந்தே இந்து வேதங்களையும் இந்து புராணங்களையும் ஆர்வமாகப் படிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
சம்பவத்தன்று வயதான தில்ஷெர் தனது வீட்டில் வசனங்களை வாசித்துக்கொண்டிருந்தபோது, ஜாகீர் மற்றும் சமீர் என்ற இரண்டு இளைஞர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை அடித்து உதைத்தனர். அதுமட்டுமின்றி அவரது ஹார்மோனியப் பெட்டியையும் உடைத்து நொறுக்கியுள்ளனர். அவரிடமிருந்து வேதங்களை எடுத்துச் சென்றதோடு, ''இந்து புத்தகங்களைப் படிக்க வேண்டாம், மீறினால் தாங்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என்று எச்சரித்து விட்டுச் சென்றனர்.
இதுகுறித்து தில்ஷெர் தொரிவிக்கையில், நான் வேலையிலிருந்து வீடு திரும்பியவுடன் குளித்து முடித்த பிறகு வழக்கம்போல நான் 'ராம் சரித்ரா மனஸ்' புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு படிக்கத் தயாராகி கொண்டிருந்தேன். அப்போது எனது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களே வந்து என்னைத் தாக்கினர்.
உண்மையில் வேதங்களைப் படிப்பது எனக்கு மன அமைதி தருகிறது. இருப்பினும், நான் அவ்வப்போது எனது சொந்த சமூகத்தின் எதிர்ப்புகளை எதிர்கொள்கிறேன்'' என்றார்.
தாக்குதலுக்குள்ளான தில்ஷெர், அலிகாரிலுள்ள டெல்லி கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மூத்த போலீஸ் அதிகாரிகளின் தலையீட்டிற்குப் பிறகு. புகார் ஏற்கப்பட்டு இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.