Last Updated : 10 Jul, 2019 01:10 PM

 

Published : 10 Jul 2019 01:10 PM
Last Updated : 10 Jul 2019 01:10 PM

மின்சாரம் பாய்ந்து 3 யானைகள் பலி: காட்டுப் பாதை வழியே சென்றுகொண்டிருந்தபோது பரிதாபம்

தாழ்ந்து தொங்கிக்கொண்டிருந்த மின் கம்பிகள் உரசியதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து அப்பகுதிவழியே சென்றுகொண்டிருந்த மூன்று யானைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் மேற்கு வங்கத்தில் இன்று காலை நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஜார்க்ராம் கோட்ட வனத்துறை அதிகாரி பாசவராஜ் தெரிவித்த விவரம்:

20 யானைகளின் கூட்டம் ஒன்று இன்று காலை சாட்பாகி காட்டுப் பகுதி அருகே உள்ள கிராமத்தின்வழியே சென்று சென்றுகொண்டிருந்தன. இப்பகுதி ஜார்காம் மாவட்டத்தில் பின்பூர் காவல்நிலைய எல்லைக்குள் வருகிறது.

இந்த யானைகளின் கூட்டத்தில் தந்தங்கள் நீண்டு வளர்ந்த மூன்று யானைகள் மட்டும் தாழ்ந்து தொங்கிக்கொண்டிருந்த மின்கம்பிகளைக் கடந்துசென்றன. அப்போது  அக்கம்பிகளில் ஏற்கெனவே பாய்ந்துகொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இம்மூன்று யானைகளும் உயிரிழந்தன.

இன்று காலை அவ்வழியே சென்ற கிராமவாசிகள் இறந்துகிடந்த யானைகளின் உடல்களைக் கண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவித்தனர்.

இவ்வாறு கோட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட வனத்துறை அதிகாரி, இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x