

பிஹார் முதல்வர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பேசுகையில் " எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் " என்று பேசினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு அப்போது, பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கண்டனம் தெரிவித்தார். பிஹாரில் மோடி என்ற சமூகத்தனர் ஏராளமாக இருக்கிறார்கள், அவர்களை புண்படுத்தும் வகையில் பேசாதீர்கள் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடியும், ‘‘என்னை அவமானப்படுத்தும் நோக்கில், திருடன் என்று கூறும் வகையில் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார்’ என்று பேசி இருந்தார். இந்த விவகாரம் மக்களவைத் தேர்தலில் பெரும் விவாத பொருளாகவும் மாறியது.
பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பாட்னா தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது ஐபிசி 500 பிரிவின் னைக்குரிய அவதூறு) கீழ் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி பாட்னா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார்.