Published : 06 Jul 2019 02:58 PM
Last Updated : 06 Jul 2019 02:58 PM

அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது பாட்னா நீதிமன்றம்

பிஹார் முதல்வர் சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பேசுகையில் " எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிக்கள் வருவார்களோ, யாருக்கு தெரியும் " என்று பேசினார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு அப்போது, பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கண்டனம் தெரிவித்தார். பிஹாரில் மோடி என்ற சமூகத்தனர் ஏராளமாக இருக்கிறார்கள், அவர்களை  புண்படுத்தும் வகையில் பேசாதீர்கள் என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடியும், ‘‘என்னை அவமானப்படுத்தும் நோக்கில், திருடன் என்று கூறும் வகையில் ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார்’ என்று பேசி இருந்தார். இந்த விவகாரம் மக்களவைத் தேர்தலில் பெரும் விவாத பொருளாகவும் மாறியது.

இதுதொடர்பாக பிஹார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பாட்னா தலைமை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில்  ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி பாட்னா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி கூறுகையில் ‘‘அரசியல ரீதியாக எதிர்ப்பு தெரிவிப்பவர்களை நீதிமன்றத்துக்கு இழுத்து அவர்களை மிரட்டும் முயற்சியில் பாஜகவும், ஆர்எஸ்எஸூம் ஈடுபட்டுள்ளது. ஜனநாயக சக்திகளின் குரல்வளையை அவர்களால் அடைக்க முடியாது. மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x