Last Updated : 08 Jul, 2019 12:33 PM

 

Published : 08 Jul 2019 12:33 PM
Last Updated : 08 Jul 2019 12:33 PM

துன்புறுத்தும் மகன், மருமகள்: ஆன்லைனில் வேண்டுகோள் விடுத்த வயதான தம்பதி- ஆட்சியர் மீட்ட நெகிழ்ச்சி சம்பவம்

தமது மகன் மற்றும் மருமகளிடமிருந்து தங்களை யாராவது காப்பாற்ற வேண்டும் என்று ஆன்லைனில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அவர்களை காஸியாபாத் மாவட்ட ஆட்சியர் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயதான தம்பதிகள் (இருவருக்கும் 68 வயதுதான்) தங்கள் சொந்த வீட்டிலிருந்து தங்களை வெளியேறுமாறு மகனும் மருமகளும் தினம்தினம் துன்புறுத்துவதை மனமுருகிக் கூறும் வீடியோ தற்போது மத்திய பிரதேசத்தில வைரலாகி வருகிறது.

இதில், ஆண் இந்திரஜித் குரோவர் என அடையாளம் காணப்பட்டார், அவர் ஏற்கெனவே இதய பிரச்சினைகளை கையாள்வதாக குற்றம் சாட்டினார், அவரது மனைவி முழங்கால் மாற்றப்பட்டு, கீல்வாதம் நோயாளியாகவும் இருந்தவர். ஆனால் அவர்கள் அனுபவிக்கும் உடல்ரீதியான துன்பங்கள் ஒருபக்கம் இருந்தபோதிலும், தம்பதியினர் தங்கள் மகன் மற்றும் மருமகளின் துன்புறுத்தலால் மிகவும் கலக்கமடைந்தனர்.

வீடியோவில் அவர்கள் அழுதபடியே பேசியதாவது:

"நாங்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் நாங்கள் எங்கு செல்வோம் என்று எங்கள் மகன் கவலைப்படவில்லை. நாங்கள் சொந்தமாக சம்பாதித்த பணத்துடன் வாங்கிய ஒரு வீட்டில் நாங்கள் வசிக்கிறோம்.

எங்களுக்கு ஒரே ஒரு மகன், எங்கள் மகள் திருமணமானவர். எங்கள் மகனும் மருமகளும் எங்களை துன்புறுத்துகிறார்கள், க்மகன் எங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தி வருகிறார், இதனால் நான் எனது மனைவியுடன் அங்கேயே எப்படி இருக்க முடியும்.''

பின்னர் அவர் குரோவர் மாவட்ட ஆட்சியரின் உதவியை நாடினார், மேலும் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை புகாராகவும் அளித்துள்ளார்.

"இந்த பேராசை கொண்ட குழந்தைகளின் பிடியிலிருந்து என்னை மீட்டு, எங்கள் சொந்த பணத்திலிருந்து நாங்கள் வாங்கிய வீட்டில் வாழ எனக்கு உதவுமாறு நான் அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்," என்று அப்புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோவுக்கு பதிலளிக்கும்விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இப்பிரச்சினையில் உடனடியாக தலையிட்டது. இரு தரப்பையும் விசாரித்து பிரச்சினையை தீர்வை நோக்கி நகர்த்தியுள்ளது.

தற்போதைய நிலைமை குறித்து தம்பதிகளின் வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்த காஸியாபாத் மாவட்ட ஆட்சியர், ''இந்த விவகாரம் ஆராயப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இது அடிப்படையில் ஒரு குடும்பத் தகராறு. என்றாலும் மகனுக்கும் அவரது மனைவிக்கும் 10 நாட்களுக்குள் பெற்றோரின் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

வீட்டை காலி செய்வதாக கூறி எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் மகன் கையெழுத்திட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x