Last Updated : 11 Jul, 2019 07:28 AM

 

Published : 11 Jul 2019 07:28 AM
Last Updated : 11 Jul 2019 07:28 AM

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கு நீரை திறக்க குமாரசாமி உத்தரவு: அரசியல் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியா?

காவிரி மேலாண்மை ஆணையத் தின் உத்தரவின்படி காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறக்க முதல் வர் குமாரசாமி உத்தரவிட்டுஉள்ளார்.

கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத் தில், “கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் வழக்கமான அளவில் பருவமழை பொழிந்தால் ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை திறந்துவிட வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. மே மற்றும் ஜூன் மாதத்தில் பருவமழை பொய்த்ததால், ஜூன் மாதத்தில் வழங்க வேண்டிய நீரை கர்நாடகா முழுமையாக திறந்துவிடவில்லை.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் மைசூரு, மண்டியா விவசாயிகளுக்கும் பாசனத்துக்காக காவிரி நீரை திறந்துவிடவில்லை. இதனால் மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகள் தொடர் போராட் டத்தில் குதித்தனர். கடந்த ஒரு வாரமாக குடகு மாவட்டத் தில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூரு வில் உள்ள ‘கிருஷ்ணா’ அரசு இல்லத்தில் காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரம் குறித்து நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் கணிசமான அளவு திறந்துவிட உத்தர விட்டார். இதேபோல மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கும் பாச னத்துக்காக நீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டார்.

கர்நாடக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் தொடர் ராஜி னாமா காரணமாக முதல்வர் குமாரசாமியின் பதவிக்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது. அதனை அவர் மறுத்துள்ள நிலையில், நேற்று நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோ சனை நடத்தினார். இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு கணிசமான அளவு நீரை திறந்து விட உத்தரவிட்டதை தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் “கர்நாடக அரசியலில் நிலவும் குழப்பத்தை திசை திருப்பவே குமாரசாமி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்” என பாஜகவினர் சமூக வலைத் தளங்களில் விமர்சித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x