Last Updated : 13 Jul, 2019 03:55 PM

 

Published : 13 Jul 2019 03:55 PM
Last Updated : 13 Jul 2019 03:55 PM

பாக். ராணுவம் அத்துமீறினால் தகுந்த பதிலடியுடன் முறியடிப்போம்: ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

பாகிஸ்தான் ராணுவம் ஏதேனும் அத்துமீறல்களில் ஈடுபட்டால், தகுந்த பதிலடிகொடுத்து அதை முறியடிப்போம், எந்த தீவிரவாத நடவடிக்கையும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

கார்கில் போர் முடிந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்பாக டெல்லியில் இன்று நிகழ்ச்சி நடந்தது. அதில் தரைப்படை ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

பாகிஸ்தான் ராணுவம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது, பாகிஸ்தான் அரசே தீவிரவாத செயல்களை இந்தியாவில் தூண்டிவிடுகிறது அவ்வாறு செய்யும்போது, இந்திய ராணுவம் நம்முடைய எல்லையை பாதுகாக்கும் பொருட்டு தயாராக இருந்து பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் செய்யும் எந்த அத்துமீறல்களுக்கும் இந்திய ராணுவம் தகுந்த பதிலடியால் முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உரி மற்றும் பாலோட் தாக்குதல்களில் இந்திய ராணுவமும், நமது அரசும் தீவிரவாதத்துக்கு எதிராக  எந்தநிலைப்பாட்டில் இருக்கிறோம் என்பதைக் காட்டியது. எந்த தீவிரவாத செயலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.

சீன ராணுவத்துடன் நாம் நல்லுறவுடன் இருந்து வருகிறோம். டாம்டெக் பகுதியில் எந்தவிதமான ஊடுருவலும் இல்லை. அவ்வாறு இருந்த பிரச்சினை, இருதரப்பு அதிகாரிகளால் மட்டத்தில்பேசித் தீர்க்கப்பட்டது. நம்முடைய பாதுகாப்பையும் மீறி சீன ராணுவம் நம்முடைய எல்லைப்பகுதியில் ஊடுருகிறார்கள் எனும் மனக்கருத்தை விடுவது அவசியம். அவ்வாறு எந்த ஊடுருவுலும்இல்லை.

எந்த நேரத்திலும் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இருதரப்பு படை வீரர்களும் அவ்வப்போது பேச்சு நடத்துகிறார்கள். ஆதலால், எந்தவிதமான அச்சமும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. நம்முடைய எல்லைக்கோட்டில் நாம் சரியான கண்ணோட்டத்தில் இருக்கிறோம்.

திபெத்திய பகுதியில் சிலர் தலாய்லாமா பிறந்தநாளைக் கொண்டாடினார்கள். அப்போது சீனா ராணுவம் திபெத்திய பகுதியை பிரிக்கும் வகையில் எந்தவிதமான செயலும் அனுமதிக்க முடியாது என்று நம்முடைய பகுதிக்கு வந்தனர். மற்றவகையில் எந்தவிதமான ஊடுருவலும் இல்லை. அனைத்தும் இயல்புக்குள் இருக்கிறது.

எல்லைப் பகுதி அருகே மக்கள் செல்லும்போது, இருதரப்பு நாடுகளின் ராணுவத்தினர் பாதுகாப்புக்கு உடன் செல்கிறார்கள். எல்லைப்பகுதியில் தீவிர காண்காணிப்பு இருப்பதால், எந்த விதமான அச்சமும் தேவையில்லை

இவ்வாறு ராவத் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x