Last Updated : 11 Jul, 2019 07:31 AM

 

Published : 11 Jul 2019 07:31 AM
Last Updated : 11 Jul 2019 07:31 AM

கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்காத சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா; சட்டப்பேரவையில் கடும் மோதல்; சட்டையைப் பிடித்து இழுத்ததால் பரபரப்பு

கர்நாடக காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்த பேரவைத் தலைவர் (சபா நாயகர்) ரமேஷ் குமாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலை ராஜினாமா செய்ய வந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க் களை காங்கிரஸார் சட்டையைப் பிடித்து இழுத்ததால் சட்டப்பேரவை வளாகத்தில் மோதல் வெடித்தது.

கர்நாடகாவில் கடந்த ஓராண்டாக முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பதவி கிடைக் காததால் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மஜத, சுயேச்சை எம்எல்ஏ-க்கள் குமார சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி னர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி காங் கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் ராஜினாமா செய்தார். கடந்த 6-ம் தேதி மூத்த காங் கிரஸ், மஜத கட்சிகளைச் சேர்ந்த 13 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களாக இருந்த 2 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவ தாக அறிவித்தனர். பாஜக நிர்வாகி கள், அதிருப்தி எம்எல்ஏ-க்களை தனி விமானம் மூலம் மும்பைக்கு அழைத் துச் சென்று, பலத்த பாதுகாப்புடன் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காங் கிரஸ் மூத்த தலைவர் ரோஷன் பெய்க் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சுதாகர் (சிக்கப்பள்ளாப் பூர்), எம்.டி. நாகராஜ் (ஹொசகோட்டை) ஆகிய இருவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். நேற்று மாலை 2 பேரும் பாஜகவினரின் பாதுகாப்புடன் ராஜினாமா கடிதம் அளிக்க சட்டப்பேரவைத் தலைவர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த காங் கிரஸ் நிர்வாகிகள், அந்த 2 எம்எல்ஏ-க்களுக் கும் எதிராக முழக்கமிட்டனர். பேரவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சுதாகரின் சட்டையை கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும், முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கேவும் பிடித்து இழுத்தனர். அங்குள்ள காங்கிரஸ் தலைவர் அலுவல கத்துக்கு அவரை அழைத்துச் சென்று, ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறு மாறு வலியுறுத்தினர்.

அந்த அறையின் கதவை பாஜகவினர் உடைக்க முற்பட்டதால் காங்கிரஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து, பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலோக் குமார் தலைமையி லான போலீஸார் இரு தரப்பினரையும் அங்கிருந்து அகற்றினர். பின்னர் சுதாகர் மற்றும் எம்.டி.நாகராஜ் ஆகியோரை காங் கிரஸாரிடம் இருந்து மீட்டனர். இதனி டையே, பாஜக முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சாரியா அந்த இருவரையும் தனி விமானம் மூலம் உடனடியாக மும்பைக்கு அனுப்பி வைத்தார்.

இதுவரை ராஜினாமா செய்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் மஜத - காங்கிரஸ் கூட்டணி யின் பலம் 99 ஆக சரிவடைந்துள்ளது. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 2 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மையை இழந் துள்ள குமாரசாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி, எடியூரப்பா தலைமையில் பாஜகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரவைத் தலைவர் மீது புகார்

இதனிடையே சட்டப்பேரவைத் தலை வர் ரமேஷ் குமார் கூறும்போது, “இதுவரை ராஜினாமா செய்துள்ள 17 எம்எல்ஏ-க் களின் கடிதங்களையும் பரிசீலித்து வரு கிறேன். அரசியல் சாசனம் எனக்கு வழங்கி யுள்ள அதிகாரத்தின்படி, விதிமுறைகளை அலசி ஆராய்ந்த பிறகே உரிய முடிவு எடுக்கப்படும். இப்போது வரை யாரு டைய ராஜினாமா கடிதத்தின் மீதும் முடிவு எடுக்கவில்லை. வரும் 12-ம் தேதி முதல் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந் தித்து, ராஜினாமாவுக்கான விளக்கம் கேட்ட பிறகே முடிவெடுக்கப்படும். 8 எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக சமர்ப்பிக்கப்படாததால் அவற்றை நிராகரித்துள்ளேன்” என்றார்.

இதையடுத்து, மும்பையில் உள்ள 10 அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக் களும் பதிவு தபால் மூலம் சட்டப்பேரவைத் தலைவருக்கு மீண்டும் ராஜினாமா கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் பிரதாப் கவுடா பாட்டீல், பைரதி பசவராஜ் உள்ளிட்ட 10 அதிருப்தி எம்எல்ஏ-க்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்காத பேரவைத் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சார்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி, “கர்நாடக எம்எல்ஏ-க்கள் முறைப்படி ராஜினாமா கடிதம் சமர்ப் பித்துள்ள நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் வேண்டுமென்றே சிலவற்றை நிராகரித்துள்ளார். மேலும் சிலரின் கடிதங்களை ஏற்காமல் காலதாம தம் செய்து வருகிறார். அவர் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். இதன்மூலம் அரசியலமைப்பின் கடமை யில் இருந்தும் விலகி விட்டார். எனவே இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதைப் பரிசீலித்த நீதிபதிகள், “இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என தெரிவித்தனர். இதை யடுத்து, இந்த மனு இன்று விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x