Published : 06 Jul 2019 08:57 AM
Last Updated : 06 Jul 2019 08:57 AM

பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது அரசின் முதல் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் (59) நேற்று தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே பெண் என்ற பெருமையுடன் இதுவரை திகழ்ந்தார்.

1969-ல் நிதியமைச்சர் பதவியை மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அத்துறையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது வசம் எடுத்துக் கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்த ஒய்.சவாண், நிதியமைச்சர் பொறுப்பை ஏற்கும் வரை ஓராண்டுக்கு நிதியமைச்சர் பொறுப்பை இந்திரா காந்தி வகித்தார். இந்நிலையில் 1970-71-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை இந்திரா தாக்கல் செய்தார். அதிக பட்ஜெட் தாக்கல் செய்தவர் (10 ஆண்டுகள்) என்ற பெருமையை மொரார்ஜி தேசாய் வகிக்கிறார்.

1991-ம் ஆண்டு தாராளமயமாக்கலுக்கு பிறகு நாட்டின் 29-வது பட்ஜெட்டை (இடைக்கால பட்ஜெட் நீங்கலாக) நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது பெண் என்ற பெருமையுடன், பாதுகாப்பு துறைக்கான இரண்டாவது பெண் அமைச்சர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. பாதுகாப்பு துறைக்கான முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை இந்திரா காந்தி வகிக்கிறார். என்றாலும் பிரதமர் பதவியுடன் கூடுதலாக பாதுகாப்பு துறையை இந்திரா கவனித்தார் என்பதால், முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெருமை நிர்மலாவுக்கே உண்டு.

1975-ல் நவம்பர் முதல் டிசம்பர் வரையிலும் பிறகு 1980 ஜனவரி முதல் 1982 ஜனவரி வரையிலும் பாதுகாப்பு துறையை கூடுதல் பொறுப்பாக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கவனித்து வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x