

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் புதிய தலைவராக லெப்டிணன்ட் ஜெனரல் ரிஸ்வான் அக்தர் நேற்று பொறுப்பேற்றுள் ளார்.
இவர் இந்தியாவுடன் பாகிஸ் தான் தேவையற்ற மோதல் போக்கை கைவிட வேண்டுமென்று கருத்துத் தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிந்து மாகாண பாகிஸ்தான் ராணுவ இயக்குநர், ஆயுதப் பரிவு கமாண்டர் என பாகிஸ்தான் ராணுவத்தில் பல்வேறு உயர் பதவிகளை ரிஸ்வான் அக்தர் வகித்துள்ளார்.
2008-ம் ஆண்டில் பிரிகேடிய ராக ரிஸ்வான் இருந்த போது பென்சுல்வேனியாவில் உள்ள அமெரிக்க ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்றார். அப்போது பாகிஸ்தான் இந்தியாவுடன் தேவையற்ற மோதல் போக்கை கைவிட வேண்டும் என்ற தலைப் பில் கட்டுரை சமர்ப்பித்தார்.